புவி அறிவியல் அமைச்சகம்

கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களில் ஒரு சில இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

प्रविष्टि तिथि: 23 JUN 2021 2:01PM by PIB Chennai

கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களில் ஒரு சில இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் கூறியுள்ளது.

அது விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தென் மேற்கு பருவ காற்று ராஜஸ்தான், மேற்கு உத்தரப் பிரதேசம், ஹரியானா, சண்டிகர்.  தில்லி மற்றும் பஞ்சாப் பகுதிகளுக்கு மேலும் முன்னேறுவது மெதுவாக இருக்கும். இது நீடித்த மழைக்கு சாதகமாக இல்லை.

ஒடிசா, மேற்கு வங்கத்தின் இமயமலைப் பகுதி, சிக்கிம், ஆகிய மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சத்தீஸ்கரில் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழை பெய்யலாம். மேற்கு வங்கத்தின் கங்கை நதிப் பகுதிகள்தென்கிழக்கு உத்தரப் பிரதேசம் மற்றும் ஜார்கண்ட்டில் 23ம் தேதியும், பீகாரில் 26 மற்றும் 27ம் தேதிகளிலும், ஒடிசாவில் 25ம் தேதியும், சத்தீஸ்கரில் 23ம் தேதியும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

தென்மேற்கு காற்றின் ஈரப்பதம் வலுவடைவதன் காரணமாக, வடகிழக்கு இந்தியாவில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் ஒரு சில இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.  அருணாச்சலப் பிரதேசத்தில் 25ம் தேதி மழை பெய்யும்.

சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தில், அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729657

*****************

 


(रिलीज़ आईडी: 1729730) आगंतुक पटल : 209
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi