பாதுகாப்பு அமைச்சகம்
தெற்கு கடற்கரை தளத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது
प्रविष्टि तिथि:
21 JUN 2021 6:31PM by PIB Chennai
தெற்கு கடற்படை தளத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த கடற்படையினர் அவர்களது குடும்பத்தினருடன் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
'யோகாவுடன் இருங்கள் வீட்டில் இருங்கள்' எனும் மையக்கருவுடன், 2021 ஜூன் 21 அன்று 7-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
தெற்கு கடற்படை தளத்தின் தலைமை தளபதி வைஸ் அட்மிரல் ஏ கே சாவ்லா மற்றும் திருமதி சபானா சாவ்லா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கடற்படையினர் குடும்பங்களுடன் இணைந்து பங்கேற்றனர்.
மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்தின் நமஸ்தே யோகா செயலியில் உள்ள வழிகாட்டுதல்களின் படி, செய்வதற்கு எளிய யோகாசனங்கள் டிஜிட்டல் தளத்தின் மூலம் செய்து காட்டப்பட்டு அவற்றை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தங்களது வீடுகளிலிருந்தவாறே பயின்றனர்.
இதைத் தொடர்ந்து, இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட பொது யோகா செயல்முறைகளின் அடிப்படையிலான தியான பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பரவியிருக்கும் தெற்கு கடற்படை தளத்தின் பல்வேறு பிரிவுகள் யோகா தினக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றன.
யோகா தொடர்பான சிறப்பு வினாடி வினா, சுவரொட்டி, கட்டுரை போட்டிகள் மற்றும் யோகா நிபுணர்களின் உரைகள் உள்ளிட்டவை சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டன.
இந்திய கடற்படை பகுதியிலும் அதை தாண்டியும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தெற்கு கடற்படை தளத்தை சேர்ந்த பல்வேறு கப்பல்களில் உள்ள பணியாளர்களும் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் பங்கேற்றனர். யோகாவை வாழ்வின் ஒரு அங்கமாக ஆக்கி கொள்ளுமாறு வைஸ் அட்மிரல் ஏ கே சாவ்லா கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729124
----
(रिलीज़ आईडी: 1729167)
आगंतुक पटल : 186