தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
நியூஸ் ஆன் ஏர் செயலியில் நேரடியாக ஒலிபரப்பப்படும் ரேடியோ நிகழ்ச்சியின் உலகளாவிய தரப்பட்டியல்: பிரச்சார் பாரதி வெளியீடு
இடுகை இடப்பட்ட நாள்:
18 JUN 2021 5:55PM by PIB Chennai
பிரச்சார் பாரதியின் அதிகாரப்பூர்வ செயலியான நியூஸ்ஆன்ஏர்-ல் அகில இந்திய ரேடியோவின் 240க்கும் மேற்பட்ட ரேடியோ நிகழ்ச்சிகள் நேரடியாக ஒலிபரப்பப்படுகின்றன. இந்த அகில இந்திய நேரடி நிகழ்ச்சிகளை இந்தியாவில் மட்டும ல்லாது உலகில் 85க்கும் மேற்பட்ட நாடுகளில் 8000-க்கும் மேற்பட்ட நகரங்களில் நேயர்கள் கேட்கின்றனர்.
நியூஸ்ஆன்ஏர் செயலி பிரபலமாக உள்ள நாடுகள், எந்தெந்த சேனல்கள், நிகழ்ச்சிகள் எந்த நாடுகளில் அதிகம் கேட்கப்படுகின்றன என்பது பற்றி ஆய்வு பட்டியல் 15 நாட்களுக்கு ஒரு முறை தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.
இதில் முக்கிய முன்னேற்றமாக நியூஸ்ஆன் ஏர் செயலி பிரபலமாக உள்ள நாடுகளில் அமெரிக்கா தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளது. பிரான்ஸ் 2ம் இடத்துக்கு சென்றுள்ளது. முதல் 10 நாடுகள் பட்டியலில் ஜப்பானும் தற்போது இடம் பிடித்துள்ளது.
ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் பட்டியிலிடப்பட்ட ரேடியோ நிகழ்ச்சிகளை கீழ்கண்ட இணைப்பில் காணலாம்.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1728257
*****************
(வெளியீட்டு அடையாள எண்: 1728311)
வருகையாளர் எண்ணிக்கை : 264