கலாசாரத்துறை அமைச்சகம்
குஜராத்தில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை உருவாக்குவதற்கு கலாச்சாரம் மற்றும் துறைமுகங்கள் அமைச்சகங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
Posted On:
16 JUN 2021 6:38PM by PIB Chennai
குஜராத்தில் உள்ள லோத்தாலில் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பிற்காக மத்திய கலாச்சாரம் மற்றும் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுதில்லியில் இன்று கையெழுத்தானது.
மத்திய கலாச்சார அமைச்சர் திரு பிரகலாத் சிங் மற்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு மன்சுக் மாண்டவியா ஆகியோர் புதுதில்லியில் உள்ள போக்குவரத்து பவனில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்தியாவின் உயரிய கலாச்சார பாரம்பரியம் குறித்து பேசிய திரு பிரகலாத் பட்டேல், நமது நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை உள்நாட்டளவிலும் சர்வதேச அளவிலும் பறைசாற்ற இந்த அருங்காட்சியகம் பெரும் பங்காற்றும் என்றார். இது வெறும் தொடக்கம் தான் என்றும், இதர இடங்களில் இதே போன்ற வசதிகள் அமைவதற்கு கலாச்சார அமைச்சகம் அனைத்து ஆதரவையும் அளிக்கும் என்றும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய திரு மன்சுக் மாண்டவியா, இந்தியாவின் வளமிக்க மற்றும் பலதரப்பட்ட கடல்சார் பொக்கிஷங்களை காட்சிப்படுத்தும் வகையில் நாட்டிலேயே முதல் முறையாக தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம் உருவாக்கப்படுவதாக தெரிவித்தார். கலாச்சார அமைச்சகத்தின் ஒத்துழைப்பின் மூலம் நாட்டின் சிறப்பான கடல்சார் வரலாறு மற்றும் வண்ணமயமான கடலோர கலாச்சாரம் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்படும் என்றார்.
தேசிய கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகம், கலங்கரை விளக்க அருங்காட்சியகம், பாரம்பரிய பூங்கா, அருங்காட்சியகத்தின் அடிப்படையிலான ஓட்டல்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தங்கும் விடுதிகள், கடல்சார் நிறுவனம் ஆகியவை 400 ஏக்கர் நிலத்தில் படிப்படியாக உருவாக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727640
----
(Release ID: 1727701)
Visitor Counter : 234