எரிசக்தி அமைச்சகம்
தக்மரா நீர்மின்சக்தி திட்டத்தை செயல்படுத்த பீகார் நீர்மின்சக்தி நிறுவனத்துடன், என்எச்பிசி புரிந்துணர்வு ஒப்பந்தம்
Posted On:
14 JUN 2021 6:21PM by PIB Chennai
பீகார் சுபால் மாவட்டத்தில், 130.1 மெகா வாட் தக்மரா நீர்மின்சக்தி திட்டத்தை செயல்படுத்த, பீகார் நீர்மின்சக்தி நிறுவனத்துடன், என்எச்பிசி இன்று காணொலி காட்சி மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
இந்த ஒப்பந்தம் மத்திய மின்துறை இணையமைச்சர் திரு ஆர்.கே.சிங், பீகார் மின்துறை அமைச்சர் திரு.பிஜேந்திர பிரசாத் யாதவ் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டு பரிமாற்றம் செய்யப்பட்டது.
தேசிய நீர்மின்சக்தி நிறுவனத்தின் (என்எச்பிசி) இயக்குனர் திரு பிஸ்வஜித் பாசு, பீகார் நீர்மின் சக்தி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு அலோக் குமார் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு ஆர்.கே.சிங், இத்திட்டத்தில் இணைந்து செயல்பட விரைவில் முன்வந்ததற்காக, என்எச்பிசி நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்தார்.
பருநிலை மாற்ற பின்னணியில் , எதிர்கால மின் உற்பத்திக்கு படிம எரிபொருள் பயன்பாட்டில் இருந்து படிமம் அல்லா எரிபொருளுக்கு மாறுவதில் நீர்மின் சக்தி உற்பத்தி, மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது என அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727007
*****************
(Release ID: 1727043)
Visitor Counter : 248