உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

அத்தியாவசிய மருத்துவ பொருட்களை அனுப்புவதில் அயராது பணியாற்றுகிறது ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையம்

Posted On: 14 JUN 2021 2:58PM by PIB Chennai

கொவிட் தடுப்பூசிகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் ஆகியவற்றை அவை செல்லும் இடங்களுக்கு சரியான நேரத்தில் அனுப்புவதில் ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையம் அயராது பணியாற்றுகிறது.

கடந்த மே 1ம் தேதி முதல் ஜூன் 9ம் தேதி வரை, 683 பெட்டிகள் (20.59 மெட்ரிக் டன்) கொவிட் தடுப்பூசி, 527 பெட்டிகள் (8.24 மெட்ரிக் டன்) ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 42 பெட்டிகள் (475 கிலோ) ஆக்ஸிமீட்டர், 30 பெட்டிகள் (542 கிலோ) கொவிட் பரிசோதனைக் கருவிகள், 8 பெட்டிகள்(224கிலோ) தடுப்பூசி உபகரணங்கள், 85 பெட்டிகள் (612 கிலோ) கருப்பு பூஞ்சை மருந்துகள் ஆகியவை பல விமானங்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

ஆக்ஸிஜன் நெருக்கடியை சமாளிக்க 9 காலி ஆக்ஸிஜன் டேங்கர்கள், ஜெய்ப்பூரிலிருந்து ஜாம்நகருக்கு இந்திய விமானப்படையின் சி17 ரக விமானம் மூலம் கடந்த ஏப்ரல் 26ம் தேதி முதல் மே 16ம் தேதி வரை அனுப்பப்பட்டுள்ளன. 

மேலும் கொவிட் தடுப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளை ஜெய்ப்பூர் விமான நிலையம் முழுமையாக பின்பற்றி, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.

*****************


(Release ID: 1726976) Visitor Counter : 257