சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

தொற்று சமயத்தில் முதியோர்களை பாதுகாக்க சுகாதாரத்தில் அரசு அதிக முதலீடு செய்ய வேண்டும் : சென்னை ஐஐடி ஆராய்ச்சி வலியுறுத்தல்

Posted On: 14 JUN 2021 3:13PM by PIB Chennai

முதியோர்களுக்கு கொவிட்-19 பாதிப்பை குறைக்க, பொது சுகாதாரத்தில் அரசு அதிகளவு முதலீடு செய்ய வேண்டும் என சென்னை ஐஐடி நடத்திய ஆய்வு கூறியுள்ளது. 

சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:

தற்போதைய தொற்று, முதியோர்களை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தும் அபாயத்தை அதிகரித்துள்ளது. இது அவர்களின் ஆரோக்கியத்தை மேலும் பாதிக்கலாம்.

ஏழை முதியவர்கள், மற்றவர்களைவிட அதிக சிரமப்படுகின்றனர். முடிவில் அவர்களுக்கு ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று அற்ற நோய்களுக்கான சிகிச்சையை தொடர்வது போன்றவை இந்த தொற்று காலத்தில் மேலும் பாதிக்கப்படுகிறது.

எதிர்காலத்திலும், முதியவர்கள் சிக்கல்களை சந்திக்கலாம். அதனால் பொது சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

2017-18ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தேசிய மாதிரி கணக்கெடுப்பு(என்எஸ்எஸ்)அடிப்படையில், ஒரு ஆய்வறிக்கை உலகமயமாக்கல் மற்றும் சுகாதாரம் என்ற இதழில்  வெளியானது.

அதில் 18.9 சதவீதம் முதியோர்கள் மட்டுமே மருத்துவ காப்பீடு எடுத்துள்ளனர். மற்றவர்களால் சுகாதாரத்தில் அதிக செலவை தாங்கி கொள்ள முடியாது. 70 சதவீத முதியவர்கள், செலவுகளுக்கு மற்றவர்களை சார்ந்துள்ளனர்.

முதியோர்கள் பற்றிய ஆய்வை சென்னை ஐஐடியின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறை பேராசிரியர் வி.ஆர் முரளிதரன், சென்னை ஐஐடியின்  ஆராய்ச்சி மாணவர் டாக்டர் அலோக் ரஞ்சன் ஆகியோர் மேற்கொண்டனர்.

இந்த என்எஸ்எஸ் ஆய்வு 8077 கிராமங்கள் மற்றும் 6181 நகரங்களில் உள்ள  1,13,823 வீடுகளில் 5,55,115 பேரிடம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு, நாடு முழுவதும் முதியோர்களின் சுகாதார நிலவரத்தில் ஏற்றத்தாழ்வுகளை  காட்டுகிறது.

‘‘ சமூக இடைவெளி, வீட்டு தனிமை போன்ற கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், முதியோர்களிடம் மன அழுத்தத்தை அதிகரிக்கலாம், பல அழற்சிகளை ஏற்படுத்தலாம் என ஆய்வுகள் தெரிவிப்பதாக பேராசிரியர் முரளிதரன் கூறினார்.

இந்த ஆய்வு குறித்து டாக்டர் அலோக் ரஞ்சன் கூறுகையில், ‘‘ இதே போன்ற தொற்று எதிர்காலத்திலும் ஏற்படலாம் என்பதால், முதியோர்களுக்கு குறைந்த அளவிலான பாதிப்பு ஏற்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்’’ என்றார்.

இந்த ஆய்வின் முடிவை கொள்கை திட்டமாக உருவாக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் விரும்புகின்றனர். தமிழகத்தில் முதியோர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளை வைத்து, பயனள்ள மறுவாழ்வு திட்டத்தை உருவாக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இவர்கள் தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறையுடன் இணைந்து செயல்படுகின்றனர். இவர்களின் ஆய்வுகளை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய பிரச்னை ஆகியவை முதுமையில் ஏற்படுகிறது. பெரும்பாலான முதியவர்களுக்கு  இதில் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிரச்சினைகள் உள்ளன. அதோடு எதிர்ப்பு சக்தியும் குறைவாக உள்ளது. 

இந்த தொற்று காலத்தில், மருத்துவ வசதிகளை பெறுவதில் முதியோர்கள் பல சிரமங்களை சந்தித்தனர்.

இவ்வாறு சென்னை ஐஐடி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*************

 



(Release ID: 1726958) Visitor Counter : 68


Read this release in: English