புவி அறிவியல் அமைச்சகம்

அரபிக் கடல், மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானாவின் எஞ்சியப்பகுதிகள், குஜராத்தில் மேலும் சில பகுதிகளுக்கு தென்மேற்கு பருவமழை முன்னேறவுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 09 JUN 2021 4:53PM by PIB Chennai

இந்திய வானிலை துறையின் வானிலை முன்னறிவிப்பு மையத்தின் படி:

(புதன்கிழமை 09 ஜூன் 2021, நண்பகல்; வெளியிடப்பட்ட நேரம்: இந்திய நேரப்படி 14.30 மணி)

அனைத்திந்திய வானிலை தகவல் சுருக்கம் மற்றும் முன்னறிவிப்பு அறிக்கை

முக்கிய வானிலை அம்சங்கள்

* மத்திய அரபிக் கடலின் அனைத்து பகுதிகள் மற்றும் வடக்கு அரபிக் கடலின் சில பகுதிகள், மும்பை மற்றும் உட்புற மகாராஷ்டிராவின் பல பகுதிகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த கொங்கன் பகுதி, தெற்கு குஜாராத்தின் சில பகுதிகள், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் இன்னும் சில பகுதிகள், வங்கக் கடலின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் வடக்கு வங்கக் கடலின் இன்னும் சில பகுதிகளுக்கு இன்று (ஜூன் 9) தென்மேற்கு பருவமழை மேலும் முன்னேறி உள்ளது.

* அரபிக் கடல், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவின் எஞ்சியப்பகுதிகள், குஜராத்தில் மேலும் சில பகுதிகள், மத்தியப் பிரதேசம் மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகள், ஒட்டுமொத்த ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்திஸ்கர் மற்றும் பிகாரில் அடுத்த 2-3 தினங்களில் தென்மேற்கு பருவமழை முன்னேறவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1725654

-----

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 1725779) வருகையாளர் எண்ணிக்கை : 195
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी