புவி அறிவியல் அமைச்சகம்
வடமேற்கு ராஜஸ்தானின் ஒரு சில பகுதிகளில் இன்று அனல் காற்று வீச வாய்ப்பு: வானிலை முன்னறிவிப்பு மையம் தகவல்
प्रविष्टि तिथि:
09 JUN 2021 9:34AM by PIB Chennai
வடமேற்கு ராஜஸ்தானின் ஒரு சில பகுதிகளில் இன்று அனல் காற்று வீச வாய்ப்புள்ளது என தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது. அது விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வடமேற்கு ராஜஸ்தானின் ஒரு சில பகுதிகளில் நேற்று அனல் காற்று வீசியது, அதிகபட்ச வெப்பநிலையும் காணப்பட்டது. அதேபோல் இன்றும் இங்கு ஒரு சில பகுதிகளில் அனல் காற்று வீச வாய்ப்புள்ளது.
பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், தில்லி, மேற்கு ராஜஸ்தான், உத்தரப் பிரதேசத்தின் பல பகுதிகளில் நேற்று 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பநிலை பதிவாகியது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உட்பட பல மாநிலங்களில், ஒரு சில இடங்களில் 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பநிலை பதிவாகியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725494
------
(रिलीज़ आईडी: 1725606)
आगंतुक पटल : 197