பாதுகாப்பு அமைச்சகம்

கடற்படை செயல்பாடுகள் தலைமை இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கர் பொறுப்பேற்பு

प्रविष्टि तिथि: 07 JUN 2021 5:32PM by PIB Chennai

இந்திய கடற்படை செயல்பாடுகள் தலைமை இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கர் இன்று பொறுப்பேற்றார்.   புனே, கதக்வசலாவில் உள்ள இந்திய பாதுகாப்புப்படை அகாடமியில் பயிற்சி பெற்ற இவர், இந்திய கடற்படையில் கடந்த 1987ம் ஆண்டு  சேர்ந்தார்அமெரிக்காவின் நியூபோர்ட்டில் உள்ள கடற்படை கல்லூரி முதல் பல இடங்களில் இவர் பயிற்சி பெற்றுள்ளார்.

நீர்மூழ்கி கப்பல் போர் முறையில் நிபுணரான இவர், ஐஎன்எஸ் மைசூர் உட்பட பல முன்னணி போர்க்கப்பல்களில் பணியாற்றியுள்ளார்.

இந்திய கடற்படையில் சிறப்பாக பணியாற்றியதற்காக, அதிவிசிஷ்ட் சேவா, விசிஷ்ட்  சேவா பதக்கங்களை வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கர் பெற்றுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725087

 

-----


(रिलीज़ आईडी: 1725156) आगंतुक पटल : 271
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी