புவி அறிவியல் அமைச்சகம்
தில்லி-தேசிய தலைநகர் பகுதியில் காற்றின் தரம் மேலும் சிறிதளவு பாதிக்கப்படும்
Posted On:
07 JUN 2021 3:34PM by PIB Chennai
இந்திய வானியல் துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையத்தின் படி:
காற்றின் போக்கு மற்றும் காற்றோட்ட குறியீட்டு முன்னறிவிப்பு
தில்லிக்கான காற்றின் தரம், காற்றோட்டம் மற்றும் வானிலை குறித்த முன்னறிவிப்பு வருமாறு:
* தில்லி-தேசிய தலைநகர் பகுதிக்கான காற்றின் தரம் நடுத்தரமான அளவில் 2021 ஜூன் 7 அன்று இருக்கும். மிதமானதில் இருந்து மோசமான பிரிவுக்கு காற்றின் தரம் 2021 ஜூன் 8 மற்றும் 2021 ஜூன் 9 அன்று மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பலத்த காற்றின் காரணமாக உள்ளூரில் தூசிப்படலம் எழும்புவதோடு, அருகில் இருக்கும் பகுதிகளிலும் இருந்தும் தூசுப்படலம் வந்தடையலாம்.
* பலத்த காற்றின் காரணமாக உள்ளூரில் தூசு எழும்புவதோடு, அருகில் இருக்கும் பகுதியில் இருந்தும் தூசு வந்தடையலாம் என்பதால், பிஎம்10 எனும் அளவில் காற்றின் தரம் இருக்கும்.
* விரிவான முன்னறிவிப்பு பகுப்பாய்வு மற்றும் சரிபார்ப்பை https://ews.tropmet.res.in எனும் தளத்தில் காணலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725056
-----
(Release ID: 1725136)
Visitor Counter : 127