புவி அறிவியல் அமைச்சகம்
அசாம், மேகாலயா, மேற்குவங்கம் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
प्रविष्टि तिथि:
06 JUN 2021 7:08PM by PIB Chennai
அசாம், மேகாலயா, மேற்குவங்கம் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையத்தின் தேசிய முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு பருவமழை, வங்காள விரிகுடாவின் மத்திய மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் முன்னேற்றம் அடைந்துள்ளதால், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, அசாம், மேகாலயா, மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 8ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒடிசாவில் வரும் 10ம் தேதி ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.
கொங்கன் மற்றும் கோவா பகுதியில் புயல் சுழல் உருவாகியுள்ளதால், தெற்கு தீபகற்ப பகுதி மற்றும் மேற்கு கடலோர பகுதியில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1724964
------
(रिलीज़ आईडी: 1724975)
आगंतुक पटल : 177