எரிசக்தி அமைச்சகம்
ஸ்கோப் வளாகத்தில் தடுப்பு மருந்து முகாமை என்டிபிசி நடத்தியது
Posted On:
04 JUN 2021 4:49PM by PIB Chennai
கொவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்தும் நோக்கிலும், தனது பணியாளர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சார்ந்துள்ளவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் வகையிலும், மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மகாரத்னா பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி, பல்வேறு இடங்களில் உள்ள தனது அலுவலகங்களில் தடுப்பு மருந்து முகாமை நடத்தி வருகிறது.
புதுதில்லியில் உள்ள என்டிபிசி ஸ்கோப் அலுவலகத்தில் ஐந்து நாட்களாக நடைபெற்ற தடுப்பு மருந்து முகாமில் 2013 பேருக்கு படிப்படியாக தடுப்பு மருந்து வழங்கப்பட்டது. கொவிட் விதிமுறைகளை பின்பற்றி முகாம் நடத்தப்பட்டது.
70,000 பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு என்டிபிசி ஏற்கனவே தடுப்பு மருந்து வழங்கியுள்ளது. அனைத்து பணியாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்துள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கூட்டு நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் உள்ளிட்ட 72 இடங்களில் என்டிபிசியின் தடுப்பு மருந்து முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
------
(Release ID: 1724460)
Visitor Counter : 196