புவி அறிவியல் அமைச்சகம்

உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் தவிர்த்து வடமேற்கு இந்தியாவின் இதர பகுதிகளில் வறண்ட வானிலை

Posted On: 02 JUN 2021 3:01PM by PIB Chennai

இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் விடுத்துள்ள செய்தி:

(நாள்: ஜூன் 2, 2021, வெளியீட்டு நேரம்:  இந்திய நேரப்படி முற்பகல் 11:45)

வடமேற்கு இந்திய பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு

இந்திய நேரப்படி இன்று காலை 8:30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்திற்கான முக்கிய வானிலை குறிப்புகள்:

•        ஜம்மு காஷ்மீர், லடாக், கில்கித்-பல்திஸ்தான், முசாபராபாதின் பெரும்பாலான இடங்களிலும், கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் ஒரு சில இடங்களிலும் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது. தில்லியில் வறண்ட வானிலை காணப்பட்டது.

•        கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்தது (பராபங்கி 110.0 மில்லிமீட்டர்).

•        ஜம்மு காஷ்மீரின் ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது.

•        பஞ்சாபில் ஒரு சில பகுதிகளில் (அமிர்தசரஸ்) திடீர் புயல் காற்று வீசியது.

•        வடமேற்கு இந்தியாவில் அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலம் ஃபலோடியில் 42.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

அடுத்த 48 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்ப நிலையில் பெரும் மாற்றம் ஏதும் இல்லை. அதன்பிறகு வடமேற்கு இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1723738

*****************


(Release ID: 1723773) Visitor Counter : 167
Read this release in: English , Urdu , Hindi