ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

மருந்து பொருட்களின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை வெளியிட்டு, விண்ணப்பங்களை அரசு வரவேற்றுள்ளது

Posted On: 01 JUN 2021 5:19PM by PIB Chennai

மருந்துகள் துறையில் முதலீடு மற்றும் உற்பத்தியை அதிகரித்து இந்தியாவின் திறனை மேம்படுத்தும் நோக்கிலும், இத்துறையில் உயர் மதிப்புடைய பொருட்கள் அதிகளவில் தயாரிக்கப்படுவதற்கு பங்காற்றும் விதத்திலும், 2021 மார்ச் 3 அன்று உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை மருந்துகள் துறை அறிவித்தது. இதன் மதிப்பு ரூ 15,000 கோடி ஆகும்.

மருந்துகள் துறை மற்றும் இதர பங்குதாரர்களுடன் நடத்தப்பட்ட தொடர் ஆலோசனைகளின் அடிப்படையில் இத்திட்டத்திற்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டு, ஜூன் 1 அன்று வெளியிடப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்களின் 2019-20 நிதியாண்டுக்கான சர்வதேச உற்பத்தி வருவாயின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின் கிழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு ஒதுக்கீடும் உள்ளது.

அனைத்து விண்ணப்பங்களும் இத்திட்டத்தின் மேலாண்மை முகமையான சிட்பி பராமரிக்கும் இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் (https://pli-pharma.udyamimitra.in). 2021 ஜூன் 2-இல் இருந்து 2021 ஜூலை 31 வரை விண்ணப்ப சாளரம் திறந்திருக்கும்.

முதல் மற்றும் இரண்டாம் பிரிவுக்கு 10 சதவீதம் ஊக்கத்தொகையும், மூன்றாம் 5 சதவீதம் ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

******************



(Release ID: 1723476) Visitor Counter : 230