பாதுகாப்பு அமைச்சகம்
அசாம் ரைபிள்ஸ் தலைமை இயக்குனராக லெப்டினன்ட் ஜெனரல் பிரதீப் சந்திரன் நாயர் பொறுப்பேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
01 JUN 2021 1:31PM by PIB Chennai
அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவின் 21வது தலைமை இயக்குனராக லெப்டினன்ட் ஜெனரல் பிரதீப் சந்திரன் நாயர் இன்று (ஜூன் 1ம் தேதி) பொறுப்பேற்றார். இவர் அதிவிஷிஷ்ட் சேவா, யுத்சேவா பதக்கங்களைப் பெற்றவர். அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவில் இவர் ஏற்கனவே ஐ.ஜியாகவும், கம்பெனி கமாண்டராகவும், பிரிகேட் கமாண்டராகவும் பணியாற்றியுள்ளார்.
லெப்டினன்ட் ஜெனரல் பிரதீப் சந்திரன் நாயர், ராணுவத்தின் சீக்கியர் படைப்பிரிவில் கடந்த 1985ம் ஆண்டு சேர்ந்தார்.
இதற்கு முன்பு ராணுவ தலைமையகத்தில், வீரர்கள் மற்றும் அதிகாரிகளை தேர்வு செய்யும் பிரிவில் தலைமை இயக்குனராகப் பணியாற்றினார். இவர் மூன்று முறை, ராணுவ தளபதியின் பாராட்டு பத்திரங்களைப் பெற்றுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1723357
(வெளியீட்டு அடையாள எண்: 1723404)
வருகையாளர் எண்ணிக்கை : 197