பாதுகாப்பு அமைச்சகம்
அந்தமான் மற்றும் நிகோபார் ராணுவ கட்டுப்பாட்டு மையத்தின் 16வது தலைமை கமாண்டராக லெப்டினன்ட் ஜெனரல் அஜய் சிங் பொறுப்பேற்பு
प्रविष्टि तिथि:
01 JUN 2021 12:54PM by PIB Chennai
அந்தமான் மற்றும் நிகோபார் ராணுவ கட்டுப்பாட்டு மையத்தின் 16வது தலைமை கமாண்டராக லெப்டினன்ட் ஜெனரல் அஜய் சிங் இன்று (ஜூன் 1ம் தேதி) பொறுப்பேற்றார்.
போர்ட் பிளேரில் உள்ள அந்தமான் மற்றும் நிகோபார் கட்டுப்பாட்டு மையம் முப்படைகளுக்கான ஒரு மையம் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு தலைமை கமாண்டராகப் பொறுப்பேற்றுள்ள லெப்டினன்ட் ஜெனரல் அஜய் சிங் ஐந்தாம் தலைமுறை ராணுவ அதிகாரி. இவரது குடும்பத்தினர் 1858ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி முதல் ராணுவத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். சனாவரில் உள்ள லாரன்ஸ் பள்ளி, தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அஜய் சிங் கடந்த 1983ம் ஆண்டு கவசவாகன படைப்பிரிவில் சேர்ந்தார். இந்தப் படைப் பிரிவை மறைந்த இவரது தந்தை உருவாக்கினார்.
இந்திய ராணுவத்தின் ஆறு கட்டுப்பாட்டு மையங்களிலும், பயிற்சி மையங்களிலும் இவர் பல பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். கவசவாகன படைப்பிரிவில், டாங்க் பயிற்சியாளராகவும். இவர் இருந்தார். ராணுவ தலைமையகத்திலும் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். அங்கோலாவில் ஐ.நா.வின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு படைப்பிரிவில், ராணுவ பார்வையாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
காஷ்மீர் மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளிலும் இவர் ஈடுபட்டுள்ளார். இவர் 16 ஆண்டு அனுபவத்துடன் மேஜர் அதிகாரியாக இருந்தபோது, சியாச்சின் மலைப் பகுதியில் தானாக முன்வந்து பணியாற்றினார். மராத்தா பட்டாலியனில் இவர் பணியாற்றிய போது, கார்கில் பகுதியில் ஆபரேஷன் விஜய் நடவடிக்கையிலும், சியாச்சின் பனிமலைப் பகுதியில் மேகதூத் ஆபரேஷனிலும் இவர் ரைபிள் படைப்பிரிவுக்கு தலைமை தாங்கினார். வீரதீர செயலக்காக இவர் ராணுவ தளபதியின் பாராட்டுக்களையும் பெற்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1723352
************
(रिलीज़ आईडी: 1723379)
आगंतुक पटल : 319