புவி அறிவியல் அமைச்சகம்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 3 ஆம் தேதி தொடங்க வாய்ப்பு

Posted On: 30 MAY 2021 4:48PM by PIB Chennai

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 3 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

அம்மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமீபத்திய வானிலை அறிகுறிகளின் படி, தென் மேற்கு பருவக்காற்று ஜூன் 1 ஆம் தேதி முதல் படிப்படியாக வலுவடைந்து கேரளாவில் மழைப் பொழிவை அதிகரிக்கும் என தெரிகிறது. ஆகையால், கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 3 ஆம் தேதி தொடங்கும் எனத் தெரிகிறது.

* அரபிக் கடலின் கிழக்கு மத்திய பகுதியில் கர்நாடக கடலோர  பகுதிக்கு  மேலே  3.1 கி.மீ தொலைவில் புயல் சுழற்சி காணப்படுகிறது.

* இந்த புயல் சுற்று தமிழகம் மற்றும் அதன் அருகேயுள்ள பகுதிகளில் கடல் மட்டத்தில் இருந்து 5.8 மற்றும் 7.6 கி.மீ உயரத்தில் உள்ளது.

மேலும் தகவல்களுக்கு www.imd.gov.in என்ற இணையளத்தை பார்க்கவும்.  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1722916

----


(Release ID: 1722981) Visitor Counter : 159


Read this release in: English , Hindi