புவி அறிவியல் அமைச்சகம்

தென்மேற்குப் பருவமழை மே 31, 20201 அன்று கேரளாவில் தொடங்க வாய்ப்பு

Posted On: 30 MAY 2021 10:40AM by PIB Chennai

தென்மேற்குப்பருவமழை மே 31, 2021 அன்று கேரளாவில் தொடங்க வாய்ப்புள்ளதென இந்திய வானியல் மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த மையம் இன்று காலை 9 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது

இதன்காரணமாக மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம், தெலங்கானா, மாஹி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் அடுத்த 5 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பையும் அந்த மையம் அறிவித்துள்ளது. அதில் ஜூன் 1 முதல் 3- ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1722829

-----


(Release ID: 1722898) Visitor Counter : 191


Read this release in: English , Urdu , Hindi