ஜல்சக்தி அமைச்சகம்
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ 5,117 கோடியை மத்தியப் பிரதேசத்திற்கு ஒதுக்கியுள்ள மத்திய அரசு, ரூ 1,185 கோடியை விடுவித்துள்ளது
Posted On:
29 MAY 2021 6:58PM by PIB Chennai
மத்தியப் பிரதேசத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பாதுகாப்பான குடிதண்ணீரை வழங்கும் நோக்கில், இந்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் தேசிய ஜல் ஜீவன் இயக்கம் முதல் கட்டமாக ரூ 1,184.86 கோடியை அம்மாநிலத்திற்கு வழங்கியுள்ளது.
2023-ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிதண்ணீர் இணைப்பு வழங்க அம்மாநிலம் உறுதியளித்துள்ள நிலையில்,
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 2021-22-ம் ஆண்டில் ரூ 5,116.79 கோடியை மத்தியப் பிரதேசத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
2019-20-ம் ஆண்டில் ரூ 571.60 கோடியை ஒதுக்கிய மத்திய அரசு, 2020-21-ம் ஆண்டில் ஒதுக்கீட்டை ரூ 1,280.13 கோடியாக அதிகரித்தது.
மத்தியப் பிரதேச முதல்வர் திரு சிவராஜ் சிங் சவுகானுடனான தனது சந்திப்பின் போது, ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிதண்ணீர் இணைப்பு வழங்குவதற்கான முழுமையான நிதியுதவி வழங்கப்படும் என மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத் உறுதியளித்தார்.
மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 1.23 கோடி கிராமப்புற வீடுகளில், 38,28 லட்சம் (31.1%) வீடுகளுக்கு தற்போது குடிதண்ணீர் இணைப்பு உள்ளது. 2022-க்குள் ஐம்பது சதவீதம் எனும் இலக்கை அடைய மாநிலம் திட்டமிட்டுள்ளது, ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிதண்ணீர் குழாய்வழி இணைப்புகள் விரைந்து வழங்கப்படுகின்றன.
-----
(Release ID: 1722797)
Visitor Counter : 185