சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

74-வது சர்வதேச சுகாதார சபைக்கு காணொலி மூலம் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தலைமை வகித்தார்

Posted On: 24 MAY 2021 8:35PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சரும், சர்வதேச சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழு தலைவருமான டாக்டர் ஹர்ஷ் வர்தன், 74-வது சர்வதேச சுகாதார சபைக்கு காணொலி மூலம் இன்று தலைமை வகித்தார். சர்வதேச சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் இதில் பங்கேற்றார்.

கூட்டத்தில் பேசிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், நிர்வாகக் குழுவின் 147-வது மற்றும் 148-வது அமர்வுகள் குறித்தும், 2020 அக்டோபர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கொவிட்-19 எதிர்வினை குறித்த அதன் சிறப்பு அமர்வு குறித்தும் எடுத்துரைத்தார்.

148-வது கூட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து பேசிய அவர், கோவாக்ஸ் வசதியின் மூலம் கொவிட்-19 தடுப்பு மருந்துகள் நியாயமான மற்றும் சமமான முறையில் அனைவருக்கும் கிடைக்க செய்வதற்கு தேவையான முயற்சிகளை எடுக்குமாறு வலியுறுத்தியதாகவும், வைரசின் விலங்கியல் ஆதாரம் குறித்து கண்டறிவதற்காக சர்வதேச விலங்குகள் நல அமைப்பு மற்றும் உணவு மற்றும் வேளாண் அமைப்புகளிடம் நெருங்கி பணியாற்றுமாறு சர்வதேச சுகாதார அமைப்புக்கு ஊக்கம் வழங்கியதாகவும் தெரிவித்தார்.

மேலும் பேசிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், “பெருந்தொற்று தயார்நிலை மற்றும் எதிர்வினைக்கான சுதந்திரமான குழு, கொவிட்-19 எதிர்வினையின் போது சர்வதேச சுகாதார விதிமுறைகள் 2005-ன் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கான குழுவின் தலைமை மற்றும் சர்வதேச சுகாதார அமைப்பின்  அவசரகால திட்டத்திற்கான சுதந்திரமான ஆய்வு மற்றும் அறிவுரை குழுவின் தலைமை ஆகிய மூன்று ஆய்வு செயல்முறைகளின் கண்டறிதல்களை, எதிர்கால முடிவெடுத்தலின் போது கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், கண்டறிதல்களை கொள்கை மற்றும் செயல் வடிவில் மாற்றுவதற்கு உறுப்பு நாடுகள் முக்கிய பங்கேற்ற வேண்டும் என்றும் நிர்வாகக் குழு வலியுறுத்தியது,” என்றார்.

******************(Release ID: 1721398) Visitor Counter : 254


Read this release in: English , Urdu , Hindi