பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

உதம்பூர் மக்களவைத் தொகுதியின் மாவட்ட வளர்ச்சி குழு தலைவர்கள் மற்றும் நகராட்சி மன்றத் தலைவர்களுடன் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாடல்

Posted On: 24 MAY 2021 4:54PM by PIB Chennai

உதம்பூர் மக்களவைத் தொகுதியின் மாவட்ட வளர்ச்சி குழு தலைவர்கள் மற்றும் நகராட்சி மன்றத் தலைவர்களுடன் கொவிட்-19 மேலாண்மை குறித்து மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று உரையாடினார்.

தங்களது மாவட்டங்கள், தொகுதிகள் மற்றும் பகுதிகளில் உள்ள கொவிட் தொடர்புடைய வசதிகளை தொடர்ந்து கண்காணிக்குமாறு அவர்களை கேட்டுக்கொண்ட அமைச்சர், கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான அவர்களது பங்கு மிகவும் முக்கியமானது என்று கூறினார்.

தங்களது வளங்கள் மற்றும் அதிகாரங்களை பயன்படுத்தி இந்த பெருந்தொற்று காலத்தில் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சட்டபூர்வ கடமை தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட வளர்ச்சி குழு பிரதிநிதிகளுக்கு உள்ளது என்று உரையாடலின்போது டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களிடம் தெரிவித்தார்.

கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் இலவச தொலைபேசி மருத்துவ ஆலோசனை வழங்கும் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர், அங்கீகாரம் பெற்ற மருத்துவர்களை இதில் பணியமர்த்த தேவையான வழிகாட்டுதல்கள் ஏற்கனவே உள்ளன என்றும், இந்த சேவையின் மூலம் மாவட்ட மருத்துவமனைகளில் மீதான சுமையை குறைக்க முடியுமென்றும் தெரிவித்தார்.

பஞ்சாயத்து அளவில் அமைக்கப்பட்டுள்ள கொவிட் பராமரிப்பு மையங்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இதன் மூலம் அடிமட்ட அளவில் உள்ள சுகாதார அமைப்புக்கு ஊக்கம் கிடைப்பதோடு அங்குள்ள நோயாளிகளின் நம்பிக்கையும் வளரும் என்று அமைச்சர் கூறினார்.

டாக்டர் ஜிதேந்திர சிங்கின் தலையீட்டுக்கு பிறகு அங்குள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் அதிகரித்திருப்பதாக கூறிய மாவட்ட வளர்ச்சி குழு தலைவர்கள், போர்க்கால அடிப்படையில் அமைச்சர் எடுத்த நடவடிக்கைக்கு பிறகு கொவிட் படுக்கைகளின் எண்ணிக்கையும் உயர்ந்திருப்பதாக கூறினர்.

                           *****************



(Release ID: 1721357) Visitor Counter : 166


Read this release in: English , Urdu , Hindi