புவி அறிவியல் அமைச்சகம்

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள சில பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மழை; கிழக்கு ராஜஸ்தானின் சில பகுதிகளில் பலத்த காற்று மே 22 அன்று வீசக்கூடும்

Posted On: 22 MAY 2021 3:56PM by PIB Chennai

இந்திய வானிலைத் துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையத்தின் படி: அனைத்து இந்திய பாதிப்பு சார்ந்த வானிலை எச்சரிக்கை அறிவிப்பு: (சனிக்கிழமை, 22 மே 2021, வெளியீடு நேரம்: இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணி) 

22 மே (நாள் 1): ♦ இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மழை (50-60 கிலோமீட்டர் வரையிலான வேகத்துடன் 70 கிலோமீட்டர் வரை) அந்தமான் நிக்கோபார் தீவுகளின் சில இடங்களில் ஏற்படக்கூடும்; மின்னல் மற்றும் பலத்த காற்று  (மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில்) கிழக்கு ராஜஸ்தானின் சில பகுதிகளில் ஏற்படக்கூடும்; மின்னலுடன் கூடிய காற்று ( மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கங்கையோர மேற்கு வங்கம், கரையோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனம், தெலங்கானா, ராயலசீமா மற்றும் கேரளா & மாஹே பகுதிகளில் ஏற்படக்கூடும்.

விதர்பா, சத்தீஸ்கர், ஒடிசா, கொங்கன் மற்றும் கோவா, மத்திய மகாராஷ்டிரா, மராத்வாடா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி & காரைக்கால் மற்றும் லட்சத்தீவுகளின் சில பகுதிகளில் மின்னல்கள் ஏற்படக்கூடும்.

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் உள்ள சில பகுதிகளில் அதிக முதல் மிக அதிக மழை பெய்யக்கூடும். அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, கடலோர ஆந்திரப் பிரதேசம், ஏனம், ராயலசீமா, கடலோர கர்நாடகா, கேரளா மற்றும் மாஹேயின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.

இப்பகுதிகளில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

23 மே (நாள் 2): ♦ மின்னல் ,காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் 70 கிலோ மீட்டர் வரை) அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள சில பகுதிகளில் பெய்யக்கூடும்.

மின்னல் மற்றும் பலத்த காற்று (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) மேற்கு ராஜஸ்தான், மேற்குவங்கத்தில் இமய மலையை ஒட்டியுள்ள பகுதிகள், கேரளா மற்றும் மாஹேயில் ஏற்படக்கூடும்.

கிழக்கு ராஜஸ்தான், கொங்கன் மற்றும் கோவா, மத்திய மகாராஷ்டிரா, கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனம், தெலங்கானா, ராயலசீமா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் லட்சத்தீவுகளில் உள்ள சில இடங்களில் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

******************



(Release ID: 1720916) Visitor Counter : 170


Read this release in: Hindi , English , Bengali , Kannada