பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
2021 ஏப்ரல் மாதத்துக்கான பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி அறிக்கை
प्रविष्टि तिथि:
21 MAY 2021 12:12PM by PIB Chennai
கடந்த மாதம் உற்பத்தி செய்யப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் விவரம்:
கச்சா எண்ணெய் உற்பத்தி
கடந்த ஏப்ரல் மாதத்தில் 2493.26 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டது. இது இலக்கு அளவை விட 1.16 சதவீதம் அதிகம். ஆனால், கடந்தாண்டு ஏப்ரல் மாத உற்பத்தியைவிட 2.07 சதவீதம் குறைவு.
கடந்த மாதம் இயற்கை எரிவாயு 2651. 49 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் உற்பத்தி செய்யப்பட்டது. இது கடந்தாண்டு ஏப்ரல் உற்பத்தியை விட 22.68 சதவீதம் அதிகம். ஆனால், மாத இலக்கை விட 1.02 சதவீதம் குறைவு.
கடந்த மாதம் பெட்ரோலியப் பொருட்களின் மொத்த உற்பத்தி 20891.57 ஆயிரம் மெட்ரிக் டன். இது மாத இலக்கை விட 1.04 சதவீதம் குறைவு. ஆனால் கடந்தாண்டு ஏப்ரல் மாத உற்பத்தியை விட 30.90 சதவீதம் அதிகம்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1720530
*****************
(रिलीज़ आईडी: 1720592)
आगंतुक पटल : 222