சுரங்கங்கள் அமைச்சகம்

2021 பிப்ரவரியில் கனிமங்களின் உற்பத்தி (தற்காலிகமானது

Posted On: 18 MAY 2021 4:38PM by PIB Chennai

சுரங்கத்துறையில் 2021ம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் கனிமங்கங்களின் உற்பத்தி குறியீடு 116.5 புள்ளிகளாக உள்ளது. இது கடந்தாண்டு பிப்ரவரி மாத உற்பத்தியை விட 5.5 சதவீதம் குறைவு.

2020-21ம் ஆண்டின் ஏப்ரல்- பிப்ரவரி வரையிலான மொத்த வளர்ச்சி, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது (-) 9.6 சதவீதம்

2021ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் கனிமங்களின் உற்பத்தி அளவு: நிலக்கரி 746 லட்சம் டன்கள், லிக்னைட் 38 லட்சம் டன்கள், இயற்கை வாயு (பயன்படுத்தப்பட்டது) 2235 மில்லியன் கியூபிக் மீட்டர், பெட்ரோலியம்(கச்சா எண்ணெய்) 23 லட்சம் டன், பாக்சைட் 1897 ஆயிரம் டன்கள், குரோமைட் 544 ஆயிரம் டன்கள், தாமிர தாது 10 ஆயிரம் டன்கள், தங்கம் 128 கிலோ, இரும்புத் தாது 207 லட்சம் டன்கள், காரியம் தாது 34 ஆயிரம் டன்கள், மாங்கனீஸ் தாது 285 ஆயிரம் டன்கள், துத்தநாக தாது 131 ஆயிரம் டன்கள்சுண்ணாம்பு 333 லட்சம் டன்கள், பாஸ்போரைட் 133 ஆயிரம் டன்கள், மேக்னசைட் 10 ஆயிரம் டன்கள், வைரம் 34 காரட்.

குரோமைட், பாஸ்போரைட், காரிய தாதுதாமிர தாது, மாங்கனீசு தாது, சுண்ணாம்பு போன்ற முக்கிய கனிமங்களின் உற்பத்தி 2021ம் ஆண்டு பிப்ரவரியில், கடந்தாண்டின் இதே கால அளவை விட நேர்மறையாக உள்ளன. மற்றவை கனிமங்கள் எதிர்மறை வளர்ச்சியாக உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1719608

-----

 



(Release ID: 1719715) Visitor Counter : 165


Read this release in: English , Urdu , Hindi , Punjabi