வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

கடந்த ஏப்ரல் மாதத்திற்கான மொத்த விலைக் குறியீட்டு எண் விவரம்

प्रविष्टि तिथि: 17 MAY 2021 12:00PM by PIB Chennai

பொருளாதார ஆலோசகர் அலுவலகம், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள ஏப்ரல் மாதத்திற்கான மொத்த விலைக் குறியீட்டு எண்கள் குறித்த விபரம்: 

நாடு முழுவதும் உள்ள நிறுவனங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி பிரிவுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 10 வாரங்களுக்குப் பிறகு தற்காலிக குறியீடு இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

மொத்த விலைக் குறியீட்டின் தற்காலிகப் புள்ளி விவரங்கள் ஒவ்வொரு மாதமும் 14 ஆம் தேதி (அல்லது அடுத்த வேலை நாள்) குறிப்பிட்ட மாதத்தில் இரண்டு வார கால தாமதத்துடன் வெளியிடப்படுகின்றன

அதனடிப்படையில் ஏப்ரல் 2021 இல் (ஏப்ரல் 2020-க்கு மேல்) மாதாந்திர விலைக் குறியீட்டு எண் பணவீக்க விகிதம் (YoY) 10.49% (தற்காலிகம்) ஆக இருந்தது. 2021 ஏப்ரல் மாதத்தில் ஆண்டு பணவீக்க விகிதம் அதிகமாக உள்ளது. குறிப்பாக கச்சா பெட்ரோலியம்,  பெட்ரோல், டீசல் மற்றும் தயாரிக்கப்பட்ட பொருட்களின் விலை உயர்வின் காரணமாக பணவீக்க விகிதம் அதிகரித்தது. 

மொத்த விலை குறியீட்டு எண், குறியீட்டின் மாத இயக்கத்தின் அடிப்படையில் மாதாந்திர பணவீக்க விகிதம் கடந்த மார்ச் 2021 உடன்  ஒப்பிடுகையில் கடந்த ஏப்ரல் 2021-ல் 1.86% (தற்காலிகம்) ஆக இருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1719264

**************


(रिलीज़ आईडी: 1719292) आगंतुक पटल : 296
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi