உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

கொவிட் -19 மருத்துவ பொருட்களின் தடையற்ற விநியோகத்தில் முக்கிய பங்காற்றுகிறது இந்தூர் விமான நிலையம்

Posted On: 11 MAY 2021 6:59PM by PIB Chennai

கொவிட் -19 மருத்துவ பொருட்களின் தடையற்ற விநியோகத்தில், இந்தூர் விமான நிலையம் முக்கிய பங்காற்றுகிறது.  ரெம்டெசிவிர் ஊசிகள், இந்தூர் விமான நிலையத்திலிருந்து குவாலியர், தானா மற்றும் போபாலுக்கு கொண்டு செல்லப்பட்டன

கடந்த ஏப்ரல் 23ம் தேதியிலிருந்து,  18 காலி ஆக்ஸிஜன் டேங்கர்கள், இந்தூரிலிருந்து ஜாம்நகர், சூரத் (குஜராத்), மற்றும் ராய்ப்பூர் (சட்டீஸ்கர்) ஆகிய இடங்களுக்கு விமானப்படையின் சி-17 குளோப் மாஸ்டர் விமானம் மூலம் அனுப்பப்பட்டது. மும்பை, ஐதராபாத் மற்றும் தில்லியிருந்து கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இந்தூருக்கு பெறப்பட்டன. இந்தப் பணிகளை விமான நிலைய குழுவினர் துரிதமாக மேற்கொண்டனர்.

கொரோனா தொற்றுக்கு எதிராக நாடு தீவிரமாக போராடி வருகிறது. இந்த நெருக்கடியான நேரத்தில், தடுப்பூசிகள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், ஆக்ஸிமீட்டர் மற்றும் இதர அத்தியாவசிய மருத்துவ பொருட்கள் மிக முக்கியமானவை. கொவிட்டுக்கு எதிரான இந்த போராட்டத்தில், விமான போக்குவரத்து துறை அமைச்சகம் மற்றும் பல விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் மற்றும் அவற்றின் கொரோனா போராளிகள் ஆகியோர் பல மாநிலங்களுக்கு அத்தியாவசிய மருத்துவ பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்ய முக்கிய பங்காற்றுகின்றனர்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:            

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1717758

 

*****



(Release ID: 1717815) Visitor Counter : 172


Read this release in: English , Urdu , Hindi