சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

எதிர்நுண்ணுயிர் மாசுப்படுத்திகளை கண்டறியும் காகிதம் அடிப்படையிலான சென்சார் : சென்னை ஐஐடி மற்றும் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

Posted On: 04 MAY 2021 2:50PM by PIB Chennai

எதிர்நுண்ணுயிர் மாசுபடுத்திகளை கண்டறியும் காகிதம் அடிப்படையிலான சென்சாரை சென்னை ஐஐடி மற்றும் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

இது நீர்நிலைகளில் எதிர் நுண்ணுயிர்  தடுப்பை தூண்டுகிறது. ‘பார்த்து சொல்லும் முறையில் இந்த சென்சார் வேலை செய்கிறது.இது பரவலான அமலாக்கத்துக்கும் பயனுள்ளதாக இருக்கிறது

உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் எதிர்நுண்ணுயிர் தடுப்பில் கவனம் செலுத்துகின்றனர்.

இது ஆபத்தான நோய்க்கிருமிகளை உள்ளடக்கிய உலகளாவிய சுகாதார நெருக்கடியாக மாறக்கூடும்.

எதிர்நுண்ணுயிர்  தடுப்புகளை பரப்புவதில் நீர்நிலைகள் முக்கிய ஆதாரமாக உள்ளன. இந்தியாவில்  எதிர்நுண்ணுயிரி தடுப்புகளின் தற்போதைய நிலவரத்தை மதிப்பிட எதிர்நுண்ணுயிர் மாசுபடுத்திகள் மற்றும் நுண்ணுயிர்கொல்லி தடுப்பு மரபணுக்கள் ஆகியவற்றை அவ்வப்போது கண்காணிப்பது மிகவும் முக்கியமாகும்.

இத்தகைய சூழலில், சுற்றுச்சூழல் கண்காணிப்புக்கு நீர்நிலைகளில் மாசுபடுத்திகளை கண்டறிய விலை குறைவான மற்றும் களத்தில் பயன்படுத்தக்கூடிய சென்சார்கள் சாத்தியமான கருவியாக இருக்கலாம்

இந்த ஆய்வை விளக்கும் வீடியோவை கீழ்கண்ட இணைப்பில் இருந்து 2021 மே 11ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்

https://fromsmash.com/IIT-Madras-Video(Valid till 11th May 2021).

இந்த ஆராய்ச்சி முதலில்நேச்சர் சயின்டிபிக் ரிப்போர்ட்ஸ்என்ற இதழில் வெளியானது மற்றும் வேதியியலில் முதல் 100 கட்டுரைகளில் ஒன்றாக பாராட்டப்பட்டது.

இந்த ஆராய்ச்சிக்கான நிதியை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, இங்கிலாந்தின்  இயற்கை சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பொறியியல் மற்றும் இயற்பியல் ஆராய்ச்சி கவுன்சில் (EPSRC) உடன் இணைந்துஇந்தியா-இங்கிலாந்து நீர் தர ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் வழங்கியது.

சென்னை  ஐஐடியில் இந்த ஆராய்ச்சி, ரசாயண பொறியியல் துறை பேராசிரியர்கள் எஸ்.புஸ்பவனம் மற்றும் டாக்டர் டி.ரங்கநாதன் ஆகியோர் தலைமையில் நடந்தது.

இந்த ஆராய்ச்சியின் தனிச்சிறப்பான அம்சங்கள் குறித்து பேராசிரியர் எஸ்.புஸ்பவனம் கூறுகையில், ‘‘காகிதம் அடிப்படையிலான இந்த சென்சார்கள், உறிஞ்சும் தன்மையுடன் செயல்படுவதால், பல்வேறு பராமரிப்பு பயன்பாடுகளுக்கு மலிவான தளமாக உள்ளன. இது தண்ணீரை பாய்ச்சும் தேவையை குறைக்கிறது.

லேசர் அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தி காகிதம் அடிப்படையிலான சாதனங்களை தயாரிப்பதற்கான ஒரு புதிய முறையை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்’’ என்றார்.

இந்த காகித சென்சார்களின் பயன்பாடுகள்:

* சுற்றுச்சூழல் கண்காணிப்பு

* உணவு பாதுகாப்பு பகுப்பாய்வு

* சுகாதார நலன் கண்காணிப்பு

 

இந்த திட்டம் குறித்து பேராசிரியர் டி.ரங்கநாதன் கூறுகையில், “சிப்ரோபிளக்சின் போன்ற நுண்ணுயிர் கொல்லிகள், டிரைகுளோசன் போன்ற பயோசைடுகள், குரோமியம், தாமிரம் மற்றும் ஈயம் போன்ற கன உலோகங்களை கண்டறிய நாங்கள் இந்த காகித அடிப்படையிலான சென்சார் கருவிகளை பயன்படுத்தினோம்.

இந்த சாதனங்களை நீர்நிலைகளில் எதிர்நுண்ணுயிர் தடுப்பு கண்காணிப்புக்கும் பயன்படுத்த முடியும்’’ என்றார்.

இவ்வாறு சென்னை ஐஐடி வெளியிட்ட பத்திரிக்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

****


(Release ID: 1715895) Visitor Counter : 114


Read this release in: English