தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்த சர்வதேச நிகழ்ச்சியில் 26 நாடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
Posted On:
05 APR 2021 7:25PM by PIB Chennai
அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், 26 நாடுகளில் உள்ள தேர்தல் மேலாண்மை அமைப்புகள் மற்றும் மூன்று சர்வதேச அமைப்புகளுக்காக சர்வதேச காணொலி தேர்தல் பார்வையாளர்கள் நிகழ்ச்சி 2021-ஐ இந்திய தேர்தல் ஆணையம் இன்று நடத்தியது.
துவக்கவுரை ஆற்றிய தலைமை தேர்தல் ஆணையர் திரு. சுனில் அரோரா, தேர்தல் அட்டவணைகளில் உலகெங்கும் முன்னெப்போதும் இல்லாத பாதிப்பை கொவிட்-19 ஏற்படுத்தியதாக கூறினார்.
தேர்தல் நடத்துவதற்கான சவால்கள் ஏராளமாக இருப்பினும், இந்த சூழ்நிலையானது தேர்தல் மேலாண்மை அமைப்புகளை ஒன்று திரட்டி அவர்களது சிறந்த செயல்பாடுகளை பகிர்ந்து கொள்ள வைத்தது என்றும் அவர் கூறினார்.
இத்தகைய சவாலான மற்றும் கடினமான சூழலில் பிகார் சட்டமன்ற தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தியதாகவும், நேர்மையான, சுதந்திரமான, வெளிப்படையான, துடிப்பான மற்றும் பாதுகாப்பான தேர்தலை பெருந்தொற்றுக் கிடையிலும் நடத்துவதே தேர்தல் ஆணையத்தின் குறிக்கோள் என்றும் அவர் கூறினார்.
‘ஏ-வெப்’ என்னும் தேர்தல் சஞ்சிகையின் முதல் பிரதியை தலைமை தேர்தல் ஆணையர் இந்நிகழ்ச்சியின் போது வெளியிட்டார். இந்த இதழ் குறித்து பேசிய அவர், தேர்தல் களத்தில் உள்ள நடைமுறைகள் மற்றும் படிப்புகளுக்கு இடையே உள்ள இடைவெளியை ‘ஏ-வெப்’ குறைக்கும் என்று கூறினார்.
26 நாடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் ஏப்ரல் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் சர்வதேச காணொலி தேர்தல் பார்வையாளர்கள் நிகழ்ச்சி 2021-ல் பங்கேற்றுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1709710
--------
(Release ID: 1709726)
Visitor Counter : 229