மத்திய பணியாளர் தேர்வாணையம்
ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு (I), 2021-இன் எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு
Posted On:
23 MAR 2021 4:48PM by PIB Chennai
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2021 பிப்ரவரி 7-ஆம் தேதி நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு (I), 2021-இன் எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அமைச்சகத்தின் தேர்வு வாரியத்தால் நேர்காணல் செய்ய தகுதி பெற்றுள்ள 6552 விண்ணப்பதாரர்களுக்கு சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு மையங்களில் பயிற்சிகள் வழங்கப்படும்.
சென்னையில் 2022 ஏப்ரலில் தொடங்கும் இந்தப் பயிற்சி 115-வது குறுகிய கால ஆணைய (தொழில்நுட்பம் சாராத) (ஆண்களுக்கான) பயிற்சி மற்றும் 29-வது குறுகிய கால ஆணைய (தொழில்நுட்பம் சாராத) (பெண்களுக்கான) பயிற்சி ஆகும்.
விண்ணப்பதாரர்களின் தேர்வு தற்காலிகமானதாகும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொழுது விண்ணப்பதாரர்கள் தங்களது பிறந்தநாள் மற்றும் கல்வித் தகுதிகளின் அசல் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வில் தகுதி பெற்று தங்களது முதல் விருப்பத்தை ராணுவமாக தேர்ந்தெடுத்துள்ள விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏற்கனவே இந்த இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம்.
எழுத்துத் தேர்வு முடிவுகளை கீழ்காணும் இணைய தளத்தில் காணலாம்:
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/mar/doc202132331.pdf
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1706961
*****************
(Release ID: 1707028)
Visitor Counter : 161