சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

எதிர் நுண்ணுயிர் தடுப்பு பிரச்சனை

Posted On: 09 MAR 2021 1:26PM by PIB Chennai

எதிர் நுண்ணுயிர் தடுப்பு பிரச்சனைக்கு, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என மாநிலங்களவையில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு அஸ்வினி குமார் சவுபே தெரிவித்தார்.

மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் அவர் கூறியதாவது:

* எதிர் நுண்ணுயிர் தடுப்பு பிரச்னைக்கு மத்திய அரசு போதிய முக்கியத்துவம் அளிக்கிறது. எதிர் நுண்ணுயிர் தடுப்பை கட்டுப்படுத்த மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

* எதிர் நுண்ணுயிர் தடுப்பை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயல் திட்டம், பல அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் இணைந்து  2017ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி தொடங்கப்பட்டது.

* எதிர் நுண்ணுயிர் தடுப்பை கட்டுப்படுத்துவதற்கான தேசிய திட்டம், 12வது ஐந்தாண்டு திட்டத்தில் தொடங்கப்பட்டது.

நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம், இத்திட்டத்தை ஒருங்கிணைந்து செயல்படுத்துகிறது.

இத்திட்டத்தின் கீழ், மாநில மருத்துவ கல்லூரிகளில் தேசிய எதிர் நுண்ணுயிர் தடுப்பு கண்காணிப்பு நெட்வொர்க், பரிசோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

பாதிப்பு குறித்த தேசிய வழிகாட்டுதல்கள், மருத்துவமனைகளில் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் கடந்த 2020 ஜனவரியில் வெளியிடப்பட்டன. இந்த வழிகாட்டுதல்கள் நாடு முழுவதும் பகிரப்பட்டுள்ளன.

* இத்திட்டத்தின் கீழ், நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம், 25 மாநிலங்களில் 30 மருத்துவ கல்லூரிகள் மூலம் கண்காணிப்பை மேற்கொள்கிறது.  இந்த நெட்வொர்க், நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில், நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் துறையின் 20 பரிசோதனைக் கூடங்கள் மூலம்  எதிர் நுண்ணுயிர் தடுப்பு கண்காணிப்பு நெட்வொர்க்கை ஒருங்கிணைக்கிறது.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1703448

*****************



(Release ID: 1703559) Visitor Counter : 200


Read this release in: English , Urdu