அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

குளோபல் பயோ இந்தியாவின் இரண்டாவது பதிப்பு 2021 மார்ச் 1 முதல் 3 வரை டிஜிட்டல் தளத்தில் நடைபெறவிருக்கிறது

Posted On: 25 FEB 2021 4:55PM by PIB Chennai

இந்திய உயிரி தொழில்நுட்பத் துறையின் பலம் மற்றும் வாய்ப்புகளை தேசிய மற்றும் சர்வதேச அளவில் வெளிப்படுத்தும் விதமாக, குளோபல் பயோ இந்தியாவின் இரண்டாவது பதிப்பு 2021 மார்ச் 1 முதல் 3 வரை டிஜிட்டல் தளத்தில் நடைபெறவிருக்கிறது.

ஐந்து டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருளாதாரத்தை எட்டும் இலட்சியத்திற்கு உயிரி தொழில்நுட்பத் துறை பெரும் பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2025-ஆம் ஆண்டுக்குள் 150 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான உயிரி பொருளாதாரத்தை கட்டமைப்பதற்கு தேவையான ஆதரவை இந்திய அரசு வழங்கி வருகிறது.

இந்த வருட குளோபல் பயோ இந்தியாவின் மையக் கருவாக 'வாழ்க்கையை மாற்றி அமைத்தல்' இருக்கும். 'உயிரி அறிவியலில் இருந்து உயிரி பொருளாதாரத்தை நோக்கி' என்பது இம்மாநாட்டின் கோஷமாக இருக்கும்.

 

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்பத் துறை, தனது பொதுத்துறை நிறுவனமான உயிரி தொழில்நுட்ப தொழில்கள் ஆராய்ச்சி உதவி குழு, இந்திய தொழில் கூட்டமைப்பு, உயிரி தொழில்நுட்பம் சார்ந்த தொழில் நிறுவனங்களின் சங்கம் மற்றும் இன்வெஸ்ட் இந்தியா ஆகியவற்றுடன் இணைந்து இதை நடத்துகிறது.

50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 200க்கும் அதிகமான கண்காட்சியாளர்கள், ஐந்து ஆயிரத்துக்கும் அதிகமான பிரமுகர்கள், ஆயிரத்துக்கும் அதிகமான புது நிறுவனங்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1700788



(Release ID: 1700869) Visitor Counter : 233


Read this release in: English , Urdu , Hindi