பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
கொவிட்-19க்கு எதிரான இந்தியாவின் ஒருங்கிணைந்த போராட்டம் வெற்றியடையும்: டாக்டர் ஜித்தேந்திர சிங்
Posted On:
24 FEB 2021 5:15PM by PIB Chennai
கொவிட்-19க்கு எதிரான இந்தியாவின் ஒருங்கிணைந்த போராட்டம் வெற்றியடையும் என மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார்.
‘தொற்று காலத்தில் சிறந்த நிர்வாக நடைமுறைகள்’ என்ற தலைப்பில் இந்தியா- மாலத்தீவு இடையே 2 நாள் இணைய கருத்தரங்கு நிகழ்ச்சி நடந்தது.
இதில் இரு நாட்டு அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதன் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கலந்து கொண்டு பேசியதாவது:
உலகளாவிய கொவிட் தொற்று, வாழ்க்கையின் அனைத்து துறைகளையும் பாதித்து, ஆட்சி நிர்வாகத்தில் ஒரு முன்னுதாரண மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்டு என்ற இரண்டு தடுப்பூசிகளுடன் இந்தியா வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.
இது கொவிட்-19 தொற்றை வரும் மாதங்களில் வெல்வோம் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது.
கொவிட் தொற்று காலத்தில் இந்தியா-மாலத்தீவு ஆகிய இரு நாடுகளும் நிலைமையை எவ்வாறு சமாளித்தன என்ற அனுபவத்தை பகிர்ந்து கொள்வதுதான் இந்த பயிலரங்கின் நோக்கம்.
இந்தியாவில் மீண்டும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த தற்சார்பு இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. எதிர்காலத்தில் எந்தவித சவாலையும் சமாளிக்கும் அளவுக்கு இந்தியாவை தற்சார்புடையதாக்குவதுதான் இந்த பிரசாரத்தின் நோக்கம்.
மேலும், அனைவருக்குமான வளர்ச்சி என்ற ஒருங்கிணைந்த வளர்ச்சி பாதையில் மத்திய அரசு சென்று கொண்டிருக்கிறது.
இவ்வாறு டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1700466
***
(Release ID: 1700609)
Visitor Counter : 171