அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

டிசைனர் மெல்லிய படச்சுருள்கள் மற்றும் குவாண்டம் பொருட்களின் கலப்பினங்களில் மின்காந்த நிகழ்வுகளின் பங்கு பற்றி நிபுணர்கள் விவாதம்

Posted On: 23 FEB 2021 12:19PM by PIB Chennai

டிசைனர்  மெல்லிய படச்சுருள்கள் மற்றும் குவாண்டம் பொருட்களின் கலப்பினங்களில்  மின்காந்த நிகழ்வுகளின் பங்கு பற்றி  தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள் விவாதித்தனர். 

குவாண்டம் பொருட்களின் பலபடி அமைப்புகள் குறித்த தேசிய கருத்தரங்கத்தை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின், மொஹாலியில் உள்ள நேனோ அறிவியல் தொழில் நுட்ப மையம், ரூர்கே ஐஐடியுடன் இணைந்து நடத்தியது. இதில்   தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குவாண்டம் பொருட்களின் பலபடி அமைப்புகள் துறையில் உள்ள சாவல்கள், நிலவரம் குறித்து 3 நாட்கள் விவாதிக்கவுள்ளனர். 
இந்த கருத்தரங்கில் துவக்கவுரை ஆற்றிய நேனோ அறிவியல் தொழில் நுட்ப மையத்தின் இயக்குனர் பேராசிரியர் அமித்தவா பத்ரா, ‘‘குவாண்டம் பொருட்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை கவர்ந்திழுக்கின்றன, மேலும் தொழில்நுட்ப பயன்பாட்டிற்கான புதிய வகையான குவாண்டம் சாதனங்களை ஒருங்கிணைக்க அதிநவீன வசதிகளுடன் நடவடிக்கைகள் தொடங்கப்படுகின்றன’’ என கூறினார். 

எலக்ட்ரானிக் பொருட்களில் குவாண்டம் பொருட்களின் முக்கியத்துவம் குறித்து ரூர்கே ஐஐடி இயக்குனர் பேராசிரியர் அஜித் குமார் சுதுர்வேதி பேசினார்.  இதே போல் குவாண்டம் தொழில்நுட்பங்கள் குறித்து கருத்தரங்கில் கலந்து கொண்ட பல நிபுணர்களும் பேசினர். 
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1700122



(Release ID: 1700337) Visitor Counter : 105


Read this release in: English , Hindi