ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
பெட்ரோகெமிக்கல் மற்றும் கீழ்நிலை நெகிழிப் பதப்படுத்துதல் தொழில்களில் தொழில்நுட்ப புதுமைகளுக்கான 10-வது தேசிய விருதுகள் நாளை வழங்கப்படுகின்றன
प्रविष्टि तिथि:
22 FEB 2021 4:44PM by PIB Chennai
பெட்ரோகெமிக்கல் மற்றும் கீழ்நிலை நெகிழிப் பதப்படுத்துதல் தொழில்களில் தொழில்நுட்ப புதுமைகளுக்கான 10-வது தேசிய விருதுகளை மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் திரு. டி வி சதானந்த கௌடா நாளை வழங்க உள்ளார்.
புதுதில்லி விக்யான் பவனில் நடைபெறவுள்ள விழாவில் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்நிலைகள் (தனிப்பொறுப்பு), ரசாயனம் மற்றும் உரங்கள் இணை அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா கலந்து கொள்கிறார்.
ரசாயனம் மற்றும் உரங்கள் துறையின் முயற்சியான பெட்ரோகெமிக்கல் மற்றும் கீழ்நிலை நெகிழிப் பதப்படுத்துதல் தொழில்களில் தொழில்நுட்ப புதுமைகளுக்கான தேசிய விருதுகள், பாலிமர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களில் ஈடுபட்டுள்ள புகழ்பெற்ற விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழிலதிபர்களை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டது.
2007 ஏப்ரலில் தேசிய பெட்ரொகெமிக்கல் கொள்கை அறிவிக்கப்பட்டது. சர்வதேச அளவில் போட்டித்தன்மைமிக்க விலைகளில், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறைகளை பயன்படுத்தி மதிப்புக் கூட்டப்பட்ட, தரமான பெட்ரோகெமிக்கல் பொருட்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமைகளை நீடித்த வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு உருவாக்குவதற்காக இக்கொள்கை வகுக்கப்பட்டது.
(रिलीज़ आईडी: 1700011)
आगंतुक पटल : 138