அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

உலகளாவிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மைகளில் இந்தியா முக்கிய நாடு

Posted On: 22 FEB 2021 12:26PM by PIB Chennai

உலகளாவிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மைகளில்  இந்தியா முக்கிய நாடாக உருவெடுத்துள்ளது.

உத்தரகாண்ட் நைனிடால் பகுதியில் உள்ள தேவாஸ்தல் என்ற இடத்தில் உலகத் தரத்திலான 3.6 மீட்டர் ஆப்டிக்கல் தொலைநோக்கி மையம் அமைக்கப்பட்டுள்ளதுவிண்வெளியில் நிகழும்  காஸ்மிக் கதிர்கள், காமா கதிர்கள், நட்சத்திரங்கள்  வெடிப்பு போன்ற சம்பவங்களை  கண்காணிப்பதில்இந்த ஆப்டிக்கல் தொலை நோக்கி மையம் உலகளாவிய முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 பல திசைகளில் திருப்பக் கூடிய, ஆசியாவின் மிகப் பெரிய தொலை நோக்கி மையமாக இது உள்ளதால், உலகின் பல நாடுகளில் இருந்தும், விஞ்ஞானிகள் இங்கு வந்து ஆய்வு பணிகளில் ஈடுபடுகின்றனர்.

கடந்த 2015ம் ஆண்டு, 20 நாடுகளுடன் கூட்டு சேர்ந்து உருவாக்கப்பட்ட புதுமை கண்டுபிடிப்பு திட்டத்திலும், இந்தியா முக்கிய பங்காற்றுகிறது.

ஸ்மார்ட் கிரிட்ஸ் திட்டத்தின் கீழ், 9 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு இந்தியா நிதியளிக்கிறது. இதில் 17 இந்திய நிறுவனங்கள், 22 வெளிநாட்டு நிறுவனங்கள், 15 தொழிற்சாலைகள் மற்றும் 8 புதுமை கண்டுபிடிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்

கட்டிடங்களில் குறைவான செலவில் குளிரூட்டும் மற்றும் வெப்பமூட்டும் வசதிகளை ஏற்படுத்தும் 3 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களையும் இந்தியா தொடங்கியுள்ளது.  50 இந்திய நிறுவனங்கள், 15 வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் 20 தொழிற்சாலைகள் ஈடுபட்டுள்ள 40 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கும் இந்தியா உதவுகிறது

கட்டிடங்களில் குறைவான செலவில் வெப்பம் மற்றும் குளிரூட்டும் வசதிகளை ஏற்படுத்தும் திட்டங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

புதிய மற்றும் வளர்ந்து வரும், அறிவியல் துறைகளிலும், உலகளாவிய அறிவியல் தலைமையை விரிவுபடுத்த, செயற்கை நுண்ணறிவுவின் உலகளாவிய கூட்டாண்மையிலும் இந்தியா இணைந்துள்ளது.

 இதன் மூலம் பொறுப்பான மற்றும் மக்கள் மைய வளர்ச்சி திட்டங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுக்கு  இந்தியா உதவும்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699882


(Release ID: 1699969)
Read this release in: English , Urdu , Hindi