அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கொவிட்-19 தடுப்பூசி, இந்தியர்களுக்கு மட்டுமல்லாது உலக மக்களுக்கும் மிகவும் அவசியம்: விஞ்ஞானிகள் வலியுறுத்தல்

Posted On: 22 FEB 2021 12:04PM by PIB Chennai

கொரோனா பெருந்தொற்றின் பரவலை முற்றிலும் ஒழிப்பதற்கு இந்திய மக்கள் அனைவரும் தடுப்பூசிகளைப் எடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள மக்களும் விரைவில் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை கணிதவியல் கழகத்தைச் சேர்ந்த திரு ராஜீவா எல். கராண்டிகர், அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுவின் திரு சேகர் சி. மாண்டே, ஐதராபாத் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் திரு எம். வித்யாசாகர் ஆகியோர், கடந்த செப்டம்பர் மாதம் கொவிட் தொற்றால் நாட்டில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97,655 ஆக இருந்தது முதல் தற்போது பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் 11,924 ஆகக் குறைந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

மார்ச் மாத இறுதிக்குள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மேலும் குறையும் என்று இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கொவிட்-19 இந்திய தேசிய உயர்நிலை மாதிரி கணித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

எனினும் இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்தத் தொற்றின் இரண்டாவது அலை உருவாவதைப் போல இந்தியாவிலும் பரவாமல் இருப்பதை உறுதி செய்வது மிகவும் அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்திய மக்கள் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு திறனைப் பெற்றுள்ள போதும் நீண்டகால பாதுகாப்பிற்கும், நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்திய மக்களுக்குத் தேவையான தடுப்பூசிகளைத் தயாரிப்பதோடு, நெருக்கடியான தருணத்தில் உலகிற்கே இந்தியா தடுப்பூசிகளை விநியோகம் செய்துவருவதையும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். கொரோனா பெருந்தொற்றின் பரவலை முற்றிலும் ஒழிப்பதற்கு இந்திய மக்கள் அனைவரும் தடுப்பூசிகளை போட்டுக் கொள்வது மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள மக்களும் விரைவில் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை கணிதவியல் கழகத்தைச் சேர்ந்த திரு. ராஜீவா எல். கராண்டிகர், அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த திரு.சேகர் சி. மாண்டே, ஐதராபாத் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் திரு. எம். வித்யாசாகர் ஆகியோர், கடந்த செப்டம்பர் மாதம் கொவிட் தொற்றால் நாட்டில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97,655 ஆக இருந்தது என்றும் தற்போது பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் 11,924 ஆக குறைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மார்ச் மாத இறுதிக்குள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மேலும் குறையும் என்று இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின், கொவிட்-19  தேசிய உயர்நிலைக் குழு கணித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த தொற்றின் இரண்டாவது அலை உருவாவதைப் போல இந்தியாவிலும் பரவாமல் இருப்பதை உறுதி செய்வது மிகவும் அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்திய மக்கள் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு திறனைப் பெற்றுள்ள போதும் நீண்டகால பாதுகாப்பிற்கும், நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்திய மக்களுக்குத் தேவையான தடுப்பூசிகளைத் தயாரிப்பதோடு, நெருக்கடியான தருணத்தில் உலகிற்கே இந்தியா தடுப்பூசிகளை விநியோகம் செய்துவருவதையும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699878



(Release ID: 1699916) Visitor Counter : 148


Read this release in: English , Urdu , Hindi , Bengali