பாதுகாப்பு அமைச்சகம்

விளையாட்டு வீரர்களுக்கு ராணுவத்தில் ஹவில்தார் பணிக்கான தேர்வு

Posted On: 19 FEB 2021 4:45PM by PIB Chennai

ஜூனியர், சீனியர் பிரிவில் மாநில அளவில்/தேசிய அளவில் நடந்த விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்ற 10 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு நிகரான தேர்வை முடித்த ஆண்களை  ராணுவத்தின் விளையாட்டு குழுவில் உடற்கட்டு, கைப்பந்து, நீச்சல், கூடைப் பந்து, கிரிக்கெட் மற்றும் கால்பந்து ஆகிய பிரிவுகளி்ல் ஹவில்தார் அந்தஸ்தில் சேர்ப்பதற்கான ஆட்கள் தேர்வு பெங்களூரில் உள்ள ராணுவ சேவை படைப்பிரிவு (ASC Centre (South) – 2 ATC)மையத்தில் 2021 மார்ச் 4 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

2021 டிசம்பர் 31 ஆம் தேதிப்படி 17 1/2 வயது முதல் 22 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ள முடியும்

மேலும் தகவல்களுக்கு 8277123122 என்ற போன் எண்- தொடர்பு கொள்ளவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699402

-------(Release ID: 1699484) Visitor Counter : 110


Read this release in: English , Urdu , Hindi