அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் பல புதிய திட்டங்கள் புதிய நிதிநிலை அறிக்கையில் உள்ளன: டாக்டர் ஹர்ஷ் வர்தன்

Posted On: 15 FEB 2021 6:30PM by PIB Chennai

நாட்டில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்பை  ஊக்குவிக்க, புதிய நிதிநிலை அறிக்கையில் உள்ள திட்டங்கள் குறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது:

இந்த நிதிநிலை அறிக்கை தொலை நோக்குடன் கூடியது. தேசிய முன்னுரிமை வாய்ந்த முக்கிய துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு கணிசமான அளவில் ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது

* தேசிய ஆராய்ச்சி அமைப்புக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கான மொத்த ஒதுக்கீடு  ரூ.50,000 கோடி. இதன் மூலம் பல்கலைக்கழகங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை ஆராய்ச்சியாளர்களுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும்

* அறிவியல் தொழில்நுட்ப துறை மற்றும் புவி அறிவியல் துறைக்கான ஒதுக்கீடு 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

* கொவிட் தொற்று காரணமாக கடந்தாண்டு மிகவும் சவாலான ஆண்டாக இருந்தது. கொவிட்-19 ஏற்பட்ட பல பிரச்னைகளை கையாள்வதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றியது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சூழலை மேலும் ஊக்குவிக்க புதிய நிதி நிலை அறிக்கையில் பல திட்டங்கள் உள்ளன. இதன் பயன்கள் மக்களை சென்றடைய மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உலகளவில் இந்தியா முக்கிய சக்தியாக விளங்க இத்திட்டங்கள் உதவும்.

* அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.4,000 கோடிக்கு அதிகமான செலவில் ஆழ்கடல் திட்டம் தொடங்கப்படுவதையும் இந்த நிதிநிலை அறிக்கை அறிவித்தது. இது கடல் வளங்களை ஆராயவும், பயன்படுத்தவும் மிகச் சிறப்பான வாய்ப்புகளை வழங்குகிறது

* தேசிய மொழி பெயர்ப்பு திட்டமும் இந்த நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் பாரம்பரிய முறைகளுடன் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இயந்திர மொழிபெயர்ப்பு தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டு இணையதளத்தில் உள்ள  நிர்வாகம் மற்றும் கொள்கை தொடர்பான விஷயங்களை மொழி பெயர்க்க இத்திட்டம் உதவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1698195

-----



(Release ID: 1698249) Visitor Counter : 197


Read this release in: English , Hindi , Manipuri , Telugu