வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
2021 ஜனவரியில் இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம்
Posted On:
15 FEB 2021 5:54PM by PIB Chennai
இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி ஏப்ரல்-ஜனவரி (2020-21)-ல் 396.60 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்ட அளவை விட 10.63 சதவீதம் குறைவு.
2020-21ம் நிதியாண்டில் ஒட்டுமொத்த இறக்குமதி 398.47 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டு இதே காலகட்ட இறக்குமதியை விட 22.80 சதவீதம் குறைவு.
1. வர்த்தகம்
ஏற்றுமதிகள் (மறு ஏற்றுமதிகள் உட்பட)
* 2021 ஜனவரியில் ஏற்றுமதிகள் ரூ. 2,00,661.11 கோடி. கடந்த 2020 ஜனவரியில் ஏற்றுமதி ரூ.1,84,369.73 கோடியாக இருந்தது. தற்போது 8.84 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இறக்குமதிகள்
* 2021 ஜனவரியில் இறக்குமதி ரூ.3,06,951.56 கோடி. 2020 ஜனவரியில் இறக்குமதி ரூ. 2,93,452.69 கோடி. தற்போது 4.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதிகள்:
▪ 2021 ஜனவரியில் கச்சா எண்ணெய் இறக்குமதி ரூ.68,743.95 கோடி. 2020 ஜனவரியில் கச்சா எண்ணெய் இறக்குமதி ரூ. 92,773.42 கோடி. இது தற்போது 25.90 சதவீதம் குறைவு.
சேவை வர்த்தகம்
வணிகம் மற்றும் சேவைகளை ஒட்டுமொத்தமாக கணக்கிடும் போது, 2020-21 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜனவரி வரை ஒட்டுமொத்த வர்த்தக பற்றாக்குறை 1.87 பில்லியன் அமெரிக்க டாலர். இந்த அளவு கடந்த 2019-20 ஆம் ஆண்டில் 2.40 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
Quick Estimates January 2021 Click here
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1698184
-----
(Release ID: 1698232)
Visitor Counter : 192