அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
வடிவமைப்பு துறையில் தொழில் முனைதல்களை உருவாக்கவும் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கவும் முதன்மை அறிவியல் ஆலோசகர் வலியுறுத்தல்
Posted On:
12 FEB 2021 10:30AM by PIB Chennai
வடிவமைப்பு துறையில் தொழில் முனைதல்களை உருவாக்கவும் இயந்திரங்களை கையாள்வதில் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கவும் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கே. விஜய் ராகவன் வலியுறுத்தியுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின், தொழல்நுட்ப தகவல் மற்றும் முன்னறிவிப்பு மதிப்பீட்டு மையத்தின் (TIFAC) 34-வது ஆண்டு விழாவில், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கலந்து கொண்டார்.
‘‘மறுதொடக்கம், மறு கண்டுபிடிப்பு, மீட்பு நடவடிக்கை - முன்னோக்கி செல்லும் வழி’’ என்ற தலைப்பில் அவர் பேசுகையில் கூறியதாவது:
நிலையான ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு தொழில்நுட்பத்தை மேம்படுத்த அனைத்து துறைகளில் தொழில் முனைவை ஏற்படுத்த வேண்டும். உள்நாட்டு உற்பத்தியை வடிவமைப்புடன் தொடங்க வேண்டும். தயாரிப்புகளின் முன் மாதிரி, மற்றும் பொருட்கள் உற்பத்தி ஆகியவை தொழில் முனைவோரால் உள்நாட்டில் மேற்கொள்ள வேண்டும். வடிவமைப்பு நிறுவனவங்கள், இந்திய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் எந்த பொருளையும், எங்கு வேண்டுமானாலும் உருவாக்க முடியும். உலகளவில் போட்டி போடும் விதத்தில் ஏற்றுமதி செய்ய முடியும்.
அறிவை பகிர்வதுதான் ஆற்றலின் அடிப்படை. கணிதம், அறிவியல் மற்றும் கம்ப்யூட்டர் அறிவியியல் ஆகியவற்றில் கற்றலை அதிகரிக்க வேண்டும். கணினி வழிமுறைகள் அடிப்படையிலான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு ஆராய்ச்சிகள் கொண்டு செல்லப்பட வேண்டும்.
இவ்வாறு மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேசினார்.
நீர்பாசனத்துக்கான சுத்திகரிப்பு ஆலை:
கழிவு நீர் கால்வாய்களில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் நிலமும், நிலத்தடி நீரும் மாசுபடுகிறது. அதை சுத்திகரிப்பு செய்து நீர்பாசனத்துக்கு பயன்படுத்துவதற்காக சிறிய ரக நீர் சுத்திகரிப்பு ஆலையை, துர்காபூரில் உள்ள சிஎஸ்ஐஆர் - மத்திய மெக்கானிக்கல் பொறியியல் ஆய்வு மையம் (CSIR-CMERI) உருவாக்கியுள்ளது. இதன் மூலம் 24,000 லிட்டர் கழிவு நீரை சுத்திகரித்து, 4 ஏக்கர் விவசாய நிலத்துக்கு நீர்பாசனம் செய்ய முடியும். இந்த சுத்திகரிப்பு ஆலை, கழிவு நீரில் உள்ள அனைத்து விதமான மாசுகளையும் அகற்றும் விதத்தில் நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
*****************
(Release ID: 1697405)
Visitor Counter : 199