விண்வெளித்துறை

நாடு முழுவதும் விண்வெளி கல்வி மற்றும் தொழில்நுட்ப துறையில் அடல் செய்முறை பயிற்சி கூடங்கள் அமைப்பதை இஸ்ரோ ஏற்றுக் கொண்டுள்ளது

Posted On: 11 FEB 2021 6:06PM by PIB Chennai

மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

* நாடு முழுவதும் விண்வெளி கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் அடல் செய்முறை பயிற்சி கூடங்களை அமைப்பதை இஸ்ரோ ஏற்றுக் கொண்டுள்ளது

* இந்த முழு திட்டமும், இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 45,   2ம் கட்டமாக 55 செய்முறை கூடங்களும்  உருவாக்கப்படுகின்றனஅடல் செய்முறை பயற்சி கூடங்களில் பயன்படுத்துவதற்காக,   விண்வெளி கல்வி மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்துக்கான  கூடுதல் பாடத்திட்டத்தை இஸ்ரோ உருவாக்குகிறது.

இதற்கு கல்வி அமைச்சகம் அங்கீகாரம் அளிக்கும். கொவிட் தொற்று சூழல் காரணமாக, இதற்கான பணிகள், கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதல் படி நடைப்பெற்று வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1697156

                                                                           ------


(Release ID: 1697209)