அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
வேலை வாய்ப்பு இணையதளம் மற்றும் கடற்பாசி திட்டத்தை தொடங்கியது தொழில்நுட்ப தகவல், முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில்((TIFAC)
Posted On:
11 FEB 2021 3:31PM by PIB Chennai
தொழிலாளர்களின் வேலை வாய்ப்புக்காக ‘சக்சம்’ என்ற இணையதளம், கடற்பாசி திட்டம் ஆகியவற்றை தொழில்நுட்ப தகவல், முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில்((TIFAC) தொடங்கியது.
தொழில்நுட்ப தகவல், முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சிலின் 38வது நிறுவன தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு ‘சக்சம்(தொழிலாளர் மன்றம்)’ என்ற வேலை வாய்ப்பு இணையதளம் தொடங்கப்பட்டது. இது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தேவையான தொழிலாளர்களை ஒன்றிணைக்கிறது. திறமையான தொழிலாளர்களை அடையாள காணவும், தொழிலாளர்களின் பணி நியமனத்தில் இடைத்தரகர்களின் தலையீட்டை ஒழிக்கவும் இது உதவும். 10 லட்சம் வேலை வாய்ப்புகள் ஏற்பட இந்த இணையதளம் உதவும்.
இத்துடன் கடற்பாசி வளர்ப்பு திட்டமும் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய தொழில்நுட்ப தகவல், முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் தலைவரும், நிதி ஆயோக் அமைப்பின் அறிவியல் உறுப்பினருமான டாக்டர் வி.கே.சரஸ்வத், ‘‘ புதிய யுகத்தில் அறிவியல் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும், எதிர்காலத்தில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம், குவாண்டம் கம்யூட்டிங், பசுமை ரசாயணம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவது இந்தியாவை தற்சார்புடையதாக்கும்’’ என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1697085
----
(Release ID: 1697170)
Visitor Counter : 233