வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்: மக்களவையில் மத்திய அமைச்சர்கள் பதில்

Posted On: 11 FEB 2021 11:49AM by PIB Chennai

மத்திய வர்த்தக தொழில்துறை இணையமைச்சர்கள் திரு.எஸ். ஓம் பிரகாஷ், திரு ஹர்தீப் சிங் பூரி ஆகியோர்  மக்களவையில் நேற்று எழுத்து பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

வருவாயையும், வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும் நோக்கில்இந்தியாவில் பொருட்களின் உற்பத்தியையும், சேவையையும் ஊக்குவிக்க திருத்தப்பட்ட பொது கொள்முதல் உத்தரவை மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறப்பித்தது. இந்த உத்தரவு அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்

* சர்வதேச ஒப்பந்தபுள்ளி கோருவது தொடர்பான பொது நிதி விதிமுறைகளையும் செலவினத்துறை திருத்தியது. இதன்படி ரூ.200 கோடி வரையிலான ஒப்பந்தப்புள்ளி கோருவதை சம்பந்தப்பட்ட துறையின்  ஒப்புதல் பெற்ற பின்பே வெளியிட வேண்டும்.

உலகளாவிய ஒப்பந்தப் புள்ளி கோரப்படாவிட்டால், உள்நாட்டு நிறுவனங்கள் அந்த ஒப்பந்தத்தைக் கோரலாம்

பொருட்கள் கொள்முதலுக்கு உள்நாட்டு நிறுவனங்கள் இடையே போட்டி ஏற்பட்டால், விலையைப் பொருட்படுத்தாமல்முதல் தர நிறுவனத்துக்கே ஒப்பந்தம் கோரும் தகுதி உள்ளது.

•        இந்த உத்தரவையடுத்து, தொலை தொடர்புத்துறை, உள்நாட்டு தயாரிப்புகளை கொள்முதல் செய்வதற்கான உத்தரவை 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி பிறப்பித்தது.

•        இந்தியாவின் உற்பத்தித் திறனையும், ஏற்றுமதியையும்  அதிகரிப்பதற்காக, மின்கலம், மின்னணு தொழில்நுட்பப் பொருட்கள், தானியங்கி வாகனங்கள்/ மருந்து, தொலை தொடர்பு, ஜவுளித்துறை, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட 10 துறைகளில் உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்புத் திட்டத்தை மத்திய அரசு அனுமதித்தது

* ரயில்வேத்துறையில் ரயில் பெட்டிகள் தயாரிப்புக்கு 50 சதவீதத்துக்கும் அதிகமான பொருட்களை உள்நாட்டு நிறுவனங்கள் கொள்முதல் செய்வதற்கான அறிவிப்பை  ரயில்வே அமைச்சகம் வெளியிட்டது. வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பில் 75 சதவீத மின் பொருட்கள் உள்நாட்டு நிறுவனங்களில் வாங்கப்படுகின்றனர்மின்சார ரயில்கள் தயாரிப்பில், 60 சதவீத மின் பொருட்கள் உள்நாட்டு நிறுவனங்களிடம் வாங்கப்படுகின்றன

•        உற்பத்தி மற்று முதலீட்டுக்கு இந்தியாவை உலகிலேயே சிறந்த இடமாக மாற்றவும், பசுமை தொழில் நகரங்களை உருவாக்கவும் தேசிய தொழில் வழித்தட திட்டத்தின் ஒரு பகுதியாக பல தொழில் வழித்தடத் திட்டங்களை மத்திய அரசு உருவாக்கி வருகிறதுஇதற்காக தேசிய தொழில் வழித்தட மேம்பாடு மற்றும் அமல்படுத்தும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

•        தில்லி, மும்பை, தொழில் வழித்தடம், நாட்டின் முதல் தொழில் வழித்தடமாக அமல்படுத்தப்பட்டது. தற்போது இங்கு கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது

•        பொருளாதார மண்டலங்களுக்கு பன்முக இணைப்புகளை வழங்க தேசிய பெரும் திட்டத்தின் கீழ் மேலும் 11 தொழில் வழித்தடங்களை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

 

•        கடந்த 2017-18ம் ஆண்டில் இந்தியா 498.61 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்தது. 2018-19ம் ஆண்டில் 538.08 பில்லியன் அமெரிக்க டாலர், 2019-20ம் ஆண்டில் 526.55 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்தது. 2019-20ம் ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி 2.14 சதவீதம் குறைந்தது.

•        மேக் இன் இந்தியா திட்டத்துக்காக, அன்னிய முதலீடுகளை கவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்காக வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள், மாநில அரசுகள் கூட்டங்களை நடத்தவும், பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடவும் தேவையான உதவிகளை மத்திய அரசு அளித்து வருகிறதுஅன்னிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்க, சர்வதேச ஒத்துழைப்பை அதிகரிக்கவும், நாட்டில் எளிதாக தொழில் செய்வதை மேம்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

* வேளாண் ஏற்றுமதியை அதிகரிக்கவும், உள்நாட்டு மற்றும் இயற்கை வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், உலக வேளாண் ஏற்றுமதியில், இந்தியாவின் பங்களிப்பை இரட்டிப்பாக்கவும், வெளிநாட்டு சந்தைகளில் இந்திய விவசாயிகள் ஏற்றுமதி வாய்ப்புகளைப் பெற்று பயனடையவும், விரிவான வேளாண் ஏற்றுமதி கொள்கையை 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு அறிமுகம் செய்தது.

* சிறப்பு பொருளாதார மண்டல கொள்கை விதிமுறைகள் கடந்த 2006ம் ஆண்டு அமலுக்கு வந்தன. இதன்படி இறக்குமதிக்கு உரிமம் தேவையில்லை. உற்பத்தி மற்றும் சேவை நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்டன. சரக்குகள் ஏற்றுமதி/ இறக்குமதியில் சுங்க அதிகாரிகளின் வழக்கமான பரிசோதனைகள் இல்லை. சிறப்பு பொருளாதார மண்டல பிரிவுகள், உள் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளலாம். சிறப்பு பொருளாதர மண்டல சட்டத்தின் கீழ் உள்ள வரிச்சலுகைகளை சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்குபவர்கள் பெற முடியும்.

 * வர்த்தகர்கள் மற்றும் கடைக்காரர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை தேசிய ஓய்வூதிய திட்டத்தை 2019ம் ஆண்டு அறிமுகம் செய்தது.  18 முதல் 40 வயதுடைய வர்த்தகர்கள்  www.maandhan.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கொவிட் நெருக்கடியை எதிர்கொள்ள வர்த்தகர்களுக்கு அவசரகால கடன் உதவி திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டது.

                                                                                                     --------------------------



(Release ID: 1697086) Visitor Counter : 224


Read this release in: English , Urdu , Manipuri