சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

பட்டியலின மாணவர்களுக்கான தேசிய உதவித்தொகை திட்டம்

प्रविष्टि तिथि: 10 FEB 2021 7:13PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக  பதிலளித்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் திரு. ரத்தன் லால் கட்டாரியா, கீழ்காணும் தகவல்களை அளித்தார்

எம் பில் மற்றும் பி எச் டி பயிலும் பட்டியலின மாணவர்களுக்காக தேசிய உதவித்தொகை திட்டத்தை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. 2020-21-ஆம் ஆண்டில், 2020 டிசம்பர் 31 வரை  3442 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

பட்டியலின மாணவர்கள் மற்றும் பட்டியலினத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளிடையே தொழில் முனைதல் மற்றும் புதுமைகளை ஊக்குவிப்பதற்காக அம்பேத்கர் சமூக புதுமை மற்றும் வழிகாட்டுதல் இயக்கத்தை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் 2020 செப்டம்பர்  30 அன்று தொடங்கியது.

தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு வருடத்திற்கு ரூ. 10 லட்சம் என மூன்று வருடங்களுக்கு ரூ. 30 லட்சம் நிதி ஆதரவாக வழங்கப்படுகிறது.

------


(रिलीज़ आईडी: 1696917) आगंतुक पटल : 166
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu