பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம்

Posted On: 10 FEB 2021 4:18PM by PIB Chennai

மத்திய வடகிழக்கு மாகாணங்களின் வளர்ச்சிக்கான இணை அமைச்சரும் (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகம்பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு , ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்தறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலில் தெரிவித்துள்ளதாவது:

வயது முதிர்ந்த ஓய்வூதியதார்களுக்கான ஆயுள் சான்றிதழ்:

வயது முதிர்ந்த ஓய்வூதியதாரர்களின் ஆயுள் சான்றிதழை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் எளிதாக சமர்ப்பிப்பதற்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

•          80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் அவர்களுக்கென்று பிரத்தியேக சாளரம் ஏற்படுத்தப்பட்டது.

•          இணையதளம் வாயிலாக ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க ஏதுவாக கடந்த 2018-ஆம் ஆண்டு சோதனை முயற்சியில் 7 நகரங்களில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2019-ஆம் ஆண்டு இந்தத் திட்டம் 24 நகரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு, 2021-ஆம் ஆண்டும் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது.

•          தபால் ஊழியர்கள், கிராம தபால் சேவகர்களின் உதவியோடு ஓய்வூதியதாரர்கள் வங்கிகளுக்கு செல்லாமல் தங்களது வீடுகளிலிருந்தே இணையதளம் வாயிலாக சான்றிதழை சமர்ப்பிக்கும் சேவையும் வழங்கப்படுகிறது.

ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள்:

ஊழலை சற்றும் சகித்துக் கொள்ள முடியாத மனப்பான்மையுடன் இந்திய அரசு அதற்கு எதிராக பல நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்கிறது. அவற்றுள் முக்கியமானவை:

•          வெளிப்படையான, குடிமக்களுக்கு உகந்த சீர்திருத்தங்களையும் மேம்படுத்தப்பட்ட முறைகளையும் பின்பற்றுதல்.

•          இந்திய அரசின் பிரிவு பி (கெசட்டட் அல்லாத) மற்றும் பிரிவு சி பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ரத்து.

•          ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கைகளில் கால வரையறையை ஏற்படுத்துவதற்காக அகில இந்திய சேவைகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள், மற்றும் மத்திய பொது சேவைகள் (பிரிவு கட்டுப்பாடு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

•          ஊழல் தடுப்பு சட்டம், 1988 திருத்தியமைக்கப்பட்டது.

•          நிறுவனங்களில் பெரும் கொள்முதல் நடவடிக்கைகளின் போது நிகழும் முறையற்ற/ தவறான போக்கிற்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய கண்காணிப்பு ஆணையம் வலியுறுத்தல்.

மேலும் விவரங்களுக்கும், கீழ்காணும் ஆங்கில செய்தி குறிப்புகளை பார்க்கவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1696775

------

 


(Release ID: 1696878) Visitor Counter : 336


Read this release in: English , Urdu