நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

கோதுமை மற்றும் அரிசி கொள்முதல் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல்

Posted On: 09 FEB 2021 5:50PM by PIB Chennai

மக்களவையில் மத்திய நுகர்வோர்  நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணையமைச்சர் திரு தன்வே ராவ் சாகேப் தாதாராவ் இன்று எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

* கடந்த 2019-20ம் ஆண்டில் 519.97 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும், 341.32 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது. 2020-21ம் ஆண்டில், பிப்ரவரி 1ம் தேதி வரை 405.32 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும், 389.92 டன் கோதுமையும் கொள்முதல் செய்யப்பட்டது.

* குறைந்த பட்ச ஆதரவு விலையில் நெல் மற்றும் கோதுமை கொள்முதல் செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது நாட்டின் உணவுப் பாதுகாப்பை  உறுதி செய்கிறது.

* தமிழகத்தில் கடந்த 2019-20ம் ஆண்டு காரீப் சந்தைப் பருவத்தில் 22.04 லட்சம் மெட்ரிக் டன் அரிசி குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

* நாடு முழுவதும் 11 இடங்களில் உணவு தானியங்கள் சேமிப்பு கலன்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

* சென்னையில் 25,000 மெட்ரிக் டன் உணவு தானியங்களும், கோவையில் 25,000 மெட்ரிக் டன் உணவு தானியங்களும்  சேமிக்கப்பட்டுள்ளன.

* போலி மற்றும் கடத்தல் பொருட்களைக் கட்டுப்படுத்த மத்திய நுகர்வோர்  நலத்துறை அமைச்சகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக அமலாக்கப் பிரிவுகளுக்கு தொடர்ச்சியான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. போலி பொருட்கள் பற்றி நுகர்வோர் அளிக்கும் அனைத்து புகார்கள் மீதும் நுகர்வோர் ஆணையம் நடவடிக்கை எடுக்கிறது.

* நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், நுகர்வோர் புகார் மீது நடவடிக்கை எடுக்க தேசிய ,மாநில, மாவட்ட அளவில் நுகர்வோர் ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* அரிசி, கோதுமை, பார்லி, சோளம், கரும்பு ஆகியவற்றிலிருந்து எத்தனால் தயாரிப்பதற்கான வடி ஆலைகளை ஏற்படுத்துவதற்கு நிதி உதவி திட்டத்தை மத்திய அரசு  கடந்த மாதம் (ஜனவரி) 14ம் தேதியன்று அறிவித்தது.

* 2019ம் ஆண்டு டிசம்பர் முதல் 2020ம் ஆண்டு நவம்பர் வரை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு 173 கோடி லிட்டர் எத்தனால்  விநியோகிக்கப்பட்டது. 2021ம் பிப்வரி 1ம் தேதி வரை 48.73 கோடி லிட்டர் எத்தனால் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில் 2020-21ம் ஆண்டு காரீப் சந்தை பருவத்தில் கடந்த 8ம் தேதி வரை 620.04 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு இதே காலகட்டத்தில் நடந்த கொள்முதலைவிட 17.60 சதவீதம் அதிகம். இதற்காக விவசாயிகளுக்கு கடந்த 8ம் தேதி வரை ரூ.1,17,064.59  கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்கப்பட்டுள்ளது.

 

*****************



(Release ID: 1696611) Visitor Counter : 139


Read this release in: English , Urdu , Manipuri