புவி அறிவியல் அமைச்சகம்
தேசிய பருவமழை திட்டம் பற்றி மாநிலங்களவையில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் விளக்கம்
Posted On:
09 FEB 2021 5:21PM by PIB Chennai
மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை மற்றும் புவி அறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் மாநிலங்களவையில் தெரிவித்த தகவல் :
பருவமழைத் திட்டத்தின் கீழ், புவி அறிவியல் அமைச்சகம் நவீன வானிலை முன்னறிவிப்பு கருவிகளை உருவாக்கியுள்ளது. இவை தற்போது செயல்பாட்டில் உள்ளன. குறுகிய கால, நீண்ட கால மற்றும் பருவ காலக் கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தேசிய பருவமழை திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்தக் கருவிகள், கடந்த 3 ஆண்டுகளில் வானிலை முன்னறிவிப்புகளை தெரிவிப்பதில் திறம்பட செயல்பட்டுள்ளன.
இந்தியாவில் வானிலை முன்னறிவிப்புகளை மேம்படுத்துவதுதான் தேசிய பருவநிலைத் திட்டத்தின் நோக்கம்.
* தேசிய பருவநிலை திட்ட மாதிரியைப் பயன்படுத்தி, பல்வேறு காலத்துக்கு ஏற்ற வானிலை முன்னறிவிப்புக் கருவிகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* தீவிர மற்றும் பருவநிலை பயன்பாடு குறித்த முன்னறிவிப்பு முறையை உருவாக்க, இந்தியா மற்றும் வெளிநாட்டு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
* தேசிய பருவநிலை திட்டத்தின் மூலம் கடந்த 3 ஆண்டுகளில், பருவகால முன்னறிவிப்புக்கு மேம்பட்ட முன்னறிவிப்பு முறை ஏற்படுத்தப்பட்டது.
* 12 கி.மீ தொலைவிலான குறுகிய மற்றும் நடுத்தர முன்னறிவிப்புக்கு, உலகளாவிலய கூட்டு முன்னறிவிப்பு முறை ஏற்படுத்தப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் கண்டறிப்பட்டன.
* புயல் பாதை கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை முறை கடந்த 3 ஆண்டுகளில் தொடர்ச்சியாக முன்னேற்றம் அடைந்துள்ளது.
* கடந்த 30 ஆண்டுகளில், தென் மேற்குப் பருவமழை பொழிவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை, இந்திய வானிலைத் துறை ஆய்வு செய்தது. இந்த அறிக்கையின் முழு விவரம் இந்திய வானிலைத்துறையின் இணையளத்தில் உள்ளது.
* உத்தரப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், மேகாலயா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை கடந்த 30 ஆண்டுகளில் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்திலும், மழைப் பொழிவு குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.
*****************
(Release ID: 1696598)
Visitor Counter : 204