பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
கொவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம்: நிறுவனங்கள் சட்டம் 2013-இல் திருத்தங்களை அறிவித்தது பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்
Posted On:
09 FEB 2021 5:55PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில், மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை இணை அமைச்சர் திரு அனுராக் தாகூர், கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளதாவது:
நிறுவனங்களின் புதிய தொடக்கம் திட்டம், 2020:
பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் ஆவணங்களின் படி 4,73,131 இந்திய நிறுவனங்களும் 1,065 வெளிநாட்டு நிறுவனங்களும் தங்களது நிலுவை ஆவணங்களை தாக்கல் செய்வதற்காக, நிறுவனங்களின் புதிய தொடக்கம் திட்டம், 2020-ஐ உபயோகித்துப் பயனடைந்திருக்கின்றன.
தாமதமாக தாக்கல் செய்யப்படும் ஆவணங்களுக்கு அபராதம் போன்றவற்றிலிருந்து இந்தத் திட்டம் விலக்கு அளிக்கிறது.
நிறுவனங்கள் சட்டம் 2013-இல் திருத்தம்:
பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம், கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பை கருத்தில் கொண்டு நிறுவனங்கள் சட்டம், 2013-இல் ஏராளமான திருத்தங்களை செய்துள்ளது. இந்த திருத்தங்கள் குறித்த விரிவான தகவல்களை இந்த இணைப்பில் பெறலாம் : https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/feb/doc20212941.pdf
நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு:
2020-21 நிதியாண்டில் (31.12.2020 வரை) 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை (கொவிட்-19 காலகட்டம்) ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை (113033), 2019-20 நிதியாண்டில் (31.12.2019 வரை) 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கையை விட (93754) சுமார் 21 சதவீதம் (20.56%) அதிகமாகும். ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
*****************
(Release ID: 1696595)
Visitor Counter : 166