தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

நகர்ப்புற ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம்

Posted On: 08 FEB 2021 5:24PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு சந்தோஷ் குமார் கங்க்வார், கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

நகர்ப்புற ஏழைகளுக்கு லாபம் தரக்கூடிய சுய வேலைவாய்ப்பு வசதிகளையும், திறனுக்கேற்ற கூலி கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகளையும் அளிப்பதன் மூலம் ஏழ்மையையும், பாதிக்கப்படக்கூடியத் தன்மையையும் குறைப்பதற்காக தீன்தயாள் அந்த்யோதயா திட்டம் - தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்என்னும் மத்திய அரசின் ஆதரவு பெற்ற திட்டத்தை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் செயல்படுத்தும் தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்பு திட்டம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் செயல்படுத்தும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம், பிரதமரின் முத்ரா திட்டம், பிரதமரின் கௌஷல் விகாஸ் திட்டம் ஆகியவையும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சமூக பாதுகாப்புடன் கூடிய புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கவும், கொவிட்-19 பெருந்தொற்றின் போது ஏற்பட்ட பணி இழப்புகளை ஈடு செய்யவும் தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் பணிபுரியாத, ரூ 15,000-க்கு கீழ் மாத ஊதியம் வாங்கும் மற்று, 2020 அக்டோபர் 1-க்கு முன் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் உறுப்பினராக இல்லாத ஊழியர்கள் இத்திட்டத்தின் கிழ் பயன்பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் உறுப்பினராக இருக்கும், ரூ 15,000-க்கு கீழ் மாத ஊதியம் வாங்கிய, கொவிட் காலத்தின் போது பணி இழந்த உறுப்பினர்களும் இத்திட்டத்தின் கிழ் பயன்பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். 

குறைந்தபட்ச கூலிகள் சட்டம், 1948-இன் விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்வதற்காக மத்திய தொழில் உறவுகள் அமைப்பு தொடர் ஆய்வுகளை செய்து வருகிறது.

2017-18-ஆம் ஆண்டில் 9187 ஆய்வுகள் நடத்தப்பட்டு, 77399 முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, 39620 முறைகேடுகள் சரிசெய்யப்பட்டு, 1651 வழக்குகள் தொடுக்கப்பட்டு, 2205 தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

2017-18-ஆம் ஆண்டில் 8327 ஆய்வுகள் நடத்தப்பட்டு, 61489 முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, 34465 முறைகேடுகள் சரிசெய்யப்பட்டு, 2081 வழக்குகள் தொடுக்கப்பட்டு, 651 தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

2019-20-ஆம் ஆண்டில் 7709 ஆய்வுகள் நடத்தப்பட்டு, 60528 முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, 23473 முறைகேடுகள் சரிசெய்யப்பட்டு, 1633 வழக்குகள் தொடுக்கப்பட்டு, 413 தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த அகில இந்திய கணக்கெடுப்பு நடத்தும் பணி தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தொழிலாளர் அலுவலகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த அட்டவணைகள், ஆய்வு மாதிரிகள் மற்றும் இதர விஷயங்களை இறுதி செய்ய நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான தேசிய செயல் திட்டத்தை தயாரிக்க துணைக்குழு ஒன்றை நிதி ஆயோக் அமைத்துள்ளது. பல்வேறு மத்திய அமைச்சகங்கள், நிபுணர்கள், அரசு சாரா நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகளில் இருந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வீடு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் கொவிட்-19 பெருந்தொற்றால் கிராமப்புறங்களில் பாதிக்கப்பட்டோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக ரூ 50,000 கோடி மதிப்பீட்டில் 2020 ஜூன் 20 அன்று ஏழைகள் நல வேலைவாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.

இதன் மூலம் ரூ 50.78 கோடி மனித உழைப்பு நாட்களுக்கான வேலைவாய்ப்புகள் 12 அமைச்சகங்கள்/துறைகள் மூலம் உருவாக்கப்பட்டன. பிகாரில் ரூ 10.993 கோடியும், ஜார்கண்டில் ரூ 1,396 கோடியும், மத்தியப் பிரதேசத்தில் ரூ 6,819 கோடியும், ஒடிசாவில் ரூ 2,042 கோடியும், ராஜஸ்தானில் ரூ 8,715 கோடியும், உத்தரப் பிரதேசத்தில் ரூ 9,330 கோடியும் இத்திட்டத்தின் கீழ் செலவிடப்பட்டது.

********************


(Release ID: 1696315) Visitor Counter : 312


Read this release in: English , Urdu